கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 83

மணியையும் நூலையும் பயன்படுத்தி அலங்கரிக்கும் கலை

தடிமனான வண்ண நூலை எடுத்துக் கொண்டு படத்தில் காட்டியுள்ளவாறு முடிச்சுப் போட்டு பழகவும். நான்கு வகையான முடிச்சுகளையும் போட்டுப் பழகிக் கொண்ட பிறகு, இந்த அலங்கரிப்புக் கலையைத் தொடங்கலாம்,

திரைச்சீலை, உடை, கழுத்து மணிகள், கைப் பைகள் என கற்பனைக்குத் தகுந்தவாறு பொருள்களை உருவாக்கலாம், வெவ்வேறு வடிவில் உள்ள வண்ண மணிகளை வாங்கவும். கற்பனைக்குத் தகுந்தவாறு வண்ணங்களைத் தேர்வு செய்து கொள்ளவும்.

முதலில் தொடக்கமாக ஒரு குச்சியையோ அல்லது அடிக்கோலையோ எடுத்துக்கொள்ளவும். அதில் முடிச்சுப்போட்டுத் தொடங்கவும், பிறகு வரிசையாக மணிகளைக் கோர்த்தும், தேவையான இடங்களில் முடிச்சுப் போட்டும் - அழகிய வடிவில் அமைகிறவாறு தொடரவும். மணிகளையே கோர்க்காமல் முடிச்சுகளையே தொடர்ந்தும் போடலாம். விரும்புகிற இடங்களில் வண்ண மணிகளையும் கோர்த்து முடிச்சுப் போடலாம். கற்பனைக்குத் தகுந்தவாறு வெவ்வேறு வகையில் இதனை உருவாக்கலாம்,www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278