உலகிலுள்ள நம் தமிழ் மழலையர்களுக்காகத் தமிழ்க் கற்பிக்கும் படிநிலைகள்

Stage Age Total Semester Educational Activities / Achievements Resource Materials

Mazhalayar 4 years complected Three எளிய பாடல்கள் அறிமுகம், நேர்கோடு / வளைகோடு வரைதல், நேர்கோடு / வளைகோட்டிலிருந்து படங்கள் வரைதல், எளிய கதைகள் அறிமுகம், கதைகளுக்கு ஏற்றவாறு நடித்தல், எளிய உரையாடல் அறிமுகம், சூழலில் உள்ள முக்கிய இடங்கள் / பொருள்களை அறிமுகப் படுத்துதல். உயிர் உள்ளவைகளை அறிமுகப்படுத்துதல், விலங்குகள், பறவைகளை அறிமுகப்படுத்துதல், அவை ஒலிக்கும் முறையை ஒலித்துக் காட்டுதல், நடைமுறை பழக்கங்களை வரிசைப்படுத்துதல் - பயிற்றுவித்தல், வரைதல், பேசுதல், நடித்தல் வழியில் அவர்களது உள்ளார்ந்த ஆற்றலைக் கண்டறிந்து வாழ்த்துதல், வளர்த்தெடுத்தல், தானே இயங்க அடித்தளம் அமைத்தல், உயிரெழுத்து, உயிர்மெய் எழுத்துகளுக்கான பாடல்களின் வழி எழுத்துகளை ஒலிவடிவில் ஒலிக்கச் செய்து, அறிமுகப்படுத்துதல், நேர்கோட்டு வடிவ எழுத்துகளை எழுதப் பயிற்சி தருதல், எளிய பாடல்கள்,
எளிய கதைகள்,

ஊக்கமூட்டும் விளையாட்டுகள்

வளைகோட்டு நேர்கோட்டுப் படங்கள்,
வீடு-சூழலில் உள்ளவற்றுக்கான பட அட்டைகள்,
நடைமுறைச் செயற்பாட்டுப் படங்கள்,

எழுத்து அட்டைகள் (அடிப்படை எழுத்துகள்)

STAGE ONE 5 years complected Three எளிய பாடல்கள், எளிய உரையாடல்கள், ஈர்ப்புடைய கதைகளை அறிமுகம் செய்தல். உடல் அசைவுகளுடன் பாடல்கள், உரையாடலகள், கதைகளைச் சொல்ல ஊக்குவித்தல். உயிர்மெய் எழுத்து மற்றும் மெய்யெழுத்துடன் கூடிய 18 அட்டைகளை உள்வாங்க வைத்தல். உயிர்மெய் எழுத்துகள் உள்ள 18 அட்டைகளை விளக்கி எழுத்துகளை உள்வாங்க வைத்தல். எழுத்துகளைச் செய்தித்தாளில் வட்டமிட்டு மீள்பார்வை செய்தல், ஒலிக்க வைத்தல், எழுத வைத்தல். இரண்டெழுத்து, மூன்றெழுத்து, நான்கெழுத்துச் சொற்களைப் படிக்கவும் உணரவும் வழி அமைத்தல். தமிழ் செய்தித்தாள்களில் எழுத்துகளை அடையாளம் காட்டவும், ஒலிக்கவும், இரண்டு, மூன்று எழுத்துகளுடைய சொற்களை வட்டமிட்டு படிக்கவும், எழுதவும், உள்வாங்கவும் பயிற்சி தருதல் எளிய பாடல்கள்,
எளிய உரையாடல்கள்,
ஈர்ப்புடைய கதைகள்,
படங்களுடன் கூடிய சொல் அட்டைகள்,

கற்பித்தல் அட்டைகள் ( 18 + 18 ),
அட்டைகள் அறிமுகம் (செய்தித்தாளில்)

(தானே எழுதிக்காட்டும், ஒலித்துக் காட்டும் கணினி மென்பொருள்),

ஊக்கமூட்டும் விளையாட்டுகள்

STAGE TWO 6 years complected Three உயிர்மெய் எழுத்து மற்றும் மெய்யெழுத்துடன் கூடிய 18 அட்டைகளை மீள்பார்வை செய்தல். உயிர்மெய் எழுத்துகள் உள்ள 18 அட்டைகளை மீள்பார்வை செய்தல். இரண்டெழுத்து, மூன்றெழுத்து, மற்றும் நான்கெழுத்துச் சொற்கைளைத் தாங்களாகவே எழுதவும், படிக்கவும் செய்தல். சொல்வது எழுதுதல் (இரண்டெழுத்து, மூன்றெழுத்து, நான்கெழுத்துச் சொற்கள் மட்டும்) சூழலில் உள்ள அனைத்துப் பொருள்களின், விலங்குகளின், பறவைகளின், இடங்களின் சொற்களைப் படங்களுடன் காட்டிப் படிக்க வைத்தல். சொற்களஞ்சியம் பெருக்குதல் (1600 சொற்கள்) மாணவர்களே சொல் அகராதி உருவாக்க ஊக்குவித்தல். செய்தித்தாள் படிக்கவும், படித்த சொற்களை மேடையில் சொல்லவும் பயிற்சி தருதல் பாடல்கள்,
உரையாடல்கள்,
கதைகள்,

கற்பித்தல் அட்டைகள் ( 18 + 18 ),
அட்டைகள் மீள்பார்வை

சொல் அட்டைகள்,
படஅகராதி,

ஊக்கமூட்டும் விளையாட்டுகள்

STAGE THREE 7 years complected Three மாணவர்களே எளிய பாடல்கள், எளிய உரையாடல்கள், எளிய கதைகள் உருவாக்கப் பயிற்சி தருதல். தாங்கள் உருவாக்கியவற்றை பிறர் முன் படித்துக் காட்டுதல், வகுப்பறையில் உருவாக்கியவற்றை வகுப்பு இதழாகத் தொகுத்து ஒவ்வொரு மாதமும் வெளியிடுதல். செய்தித்தாள் படிக்கவும், நூலக புத்தகங்களைப் படிக்கவும் படித்து உணர்ந்ததை மேடையில் சுருக்கிச் சொல்லவும் பயிற்சி தருதல். குரல் ஏற்ற இறக்கத்துடன் வெளிப்படுத்தப் பயிற்சி தருதல். படித்து உணருவதற்குரிய எளிய சங்க இலக்கிய பாடல்களையும், குறிப்புகளையும் அறிமுகப் படுத்துதல். படித்தவற்றைச் சொல்லச் செய்தல். இசைப் பாடல்கள்,
உரையாடல்கள்,
கதைகள்
(மாணவர்களே படித்து இயங்க உதவுவது)

படித்து அறிவதற்குரிய
எளிய சங்க இலக்கிய பாடல்கள்,
வழிநடத்தும் கதைகள்.
எளிய குறிப்புகள்,

STAGE FOUR 8 years complected Three படித்து உள்வாங்குதற்குரிய சங்க இலக்கிய பாடல்களையும், உரைவீச்சுகளையும், குறிப்புகளையும் அறிமுகப் படுத்துதல் செய்தித்தாள் படிக்கவும், நூலக புத்தகங்களைப் படிக்கவும், படித்து உணர்ந்ததை மேடையில் சுருக்கிச் சொல்லவும் பயிற்சி தருதல், தான் படித்து அறிந்ததை எழுதப் பயிற்சி தருதல், சிறு கட்டுரைகளை உருவாக்க ஊக்குவித்தல், ஒரு தலைப்பின் வழி கண்டறிந்து, குறிப்பு எடுத்து, குழுவாக இணைந்து தொகுத்து, மேடையில் சொல்லப் பயிற்சி தருதல். படித்து உள்வாங்குதற்குரிய

சங்க இலக்கியப் பாடல்கள்,
உரைவீச்சுகள்,
குறிப்புகள்,

நாளிதழ்கள், திங்களிதழ்கள்,
நூலகப் புத்தகங்கள்.

தொடர்புக்கு : mail : pollachinasan@gmail.com, mobile : 9788552061, skype ID : pollachinasan1951