என்னைப் பற்றி கீழுள்ள இணைப்பிலும் காணலாம், எழுதிய நண்பர்களுக்கு நன்றிகள் பல
[ மதிபாலா ] [ விக்கிபீடியா ]பெயர்: ம.நடேசன்
( பொள்ளாச்சி நசன் )
தமிழ்க்கனல்


கல்வித் தகுதி
க.மு.,அறி.மு.,கல்.மு.,தொ.தூ.க.,ஆய்வு.மு.,
(M.A.,M.Sc.,M.Ed.,D.D.E.,M.Phil.,)
பிறந்த நாள் : 15 - 9 - 1952

பட்டறிவு

25 ஆண்டுகள் ஆசிரியப்பயிற்சி
2009 இல் பணி ஓய்வு
20 ஆண்டுகள் இதழ்கள் சேகரிப்பு
சேகரித்த இதழ்களைக் குறுவட்டு வழிப் பாதுகாப்பு
எளிய முறையில் தமிழ் கற்பித்தல்
கற்பித்தலுக்கான எளிய கருவிகள் ஆக்குதல்
தாய்த் தமிழ்த் தொடக்கப்பள்ளி நடத்துதல்

1991 இல் சிற்றிதழ்ச்செய்தி ஆய்வு இதழ்
நடத்த அச்சுக்கோர்த்தல்

தற்பொழுது...

தமிழம் வலையை முழுமையாகத் திட்டமிட்டு,
தட்டச்சு செய்து html கோப்புகளாக்கி, வலையேற்றுதல்.

அரிய நூல்களைத் திரட்டி அவற்றைப் படவடிவக்
கோப்புகளாக்கி அடுத்த தலைமுறையினருக்காகப் பாதுகாத்தல்.

1991 இல் கையால் சுற்றும் இயந்திரத்தில் சிற்றிதழ்ச் செய்தி

இலவச இலக்கிய இதழை அச்சாக்குதல்

1983 இல் புதுதில்லியில் நல்லாசிரியர் விருது பெறுதல்

சிற்றிதழ்கள் கண்காட்சி நடத்துதல்

பெருங்காய மூட்டை சுமந்து

என்னைப் படிக்க வைத்த என் அப்பா.


நண்பர்களின் கைவண்ணத்தில்....
படித்தல் திறனை மேம்படுத்துவதற்கான பயிலரங்கில்
( கோவை - 28-02-2012 ) படிக்கப்பட்ட வாழ்த்துப்பா

இளமையாய் வெயிலடிக்கும் நற்கொங்குக் கோவையிலே
படித்தல் திறனுக்கொரு பயிற்சியினை ஆணையிட்டு
வளமையாய்ச் சிந்தித்து அழைத்திங்கே கொண்டுவந்து
அமரவைத்த அரசுக்கு நன்றிகள் நான்சொல்வேன்
புலமையாய்ப் பூத்த புதுத்தமிழ் நறுமலராம்
பொள்ளாச்சி நசனின் சொல்லமுதை நாம்பருகி
தலைமையாய் அவருடைய வழிநடக்கக் கிடைத்த
தனிப்பெரும் வாய்ப்புக்குத் தமிழால் நன்றிசொல்வேன்

தற்பெருமை ஏதுமில்லை தன்னலம் சிறிதுமில்லை
எளிமைக்குக் குறையில்லை எண்ணத்தில் ஊமையில்லை
விற்பெருமை ஓரியைப்போல் சொற்பெருமை கொண்டநம்
நசனின் சிந்தனைகள் நல்லதமிழ்ச் சிந்தனைகள்
கற்பெருமை காட்டுகின்ற சோழர்தம் கோயில்கள்போல்
அறிவின் பெருமைக்கு நசனின் சொற்களன்றோ ?
பிற்பெருமை கொண்டவரின் புன்னகை மிகச்சிறப்பு
நற்பெருமை கொண்டநசன் நாளும் வாழியவே.

ஓலைச் சுவடிகளில் உறங்கிய நம்தமிழை
அச்சுக்குக் கொண்டுவந்தார் அறிஞர் உ.வே.சா
நூலைப் பதிப்பத்தார் நொசிந்த நிலையினிலும்
அன்னவர் அவர்போல அரும்பாடு பலபட்டு
வேலைபல செய்து இணையத்தில் தமிழ்வளர்க்கும்
பொள்ளாச்சி நசனென்றும் பொலிவோடு வாழியவே
பாலைப் புசித்து உயிர்வாழும் பூனையைப்போல்
தமிழைப் புசிக்குமித் தலைமகன் வாழியவே.

வலைதளத்தில் நசன்பதிக்கும் நற்கருத்துச் சிந்தனைகள்
வையகத் தமிழுக்கு வழங்குகின்ற நல்லுணவு
மலைத்தளத்தில் சிறக்கின்ற குறிஞ்சிமலர்போல தமிழ்க்
கலைத்தளத்தில் இவரேதான் கவினுடைய குறிஞ்சிப்பூ
சிலைத்தளத்தில் சிறப்பது சிற்பியின் கைவண்ணம் தமிழ்
வலைதளத்தில் சிறப்பது இவருடைய நல்லெண்ணம்
அலைத்தளத்தில் ஆடிவரும் ஆர்ப்பரிக்கும் கடல்போல
தமிழ்வலைத்தளத்தில் நசன்புகழ் வாழ்க நாளும்.

தெங்கங்காய் புகழ்பாடும் பொள்ளாச்சி நகருக்குப்
புகழ்ப்பெருமை பலவுண்டு என்றாலும்
எங்கெங்கும் இடம்பிடிக்கும் இணையத்தில் இவரிறக்கும்
தமிழ்ப்பயிற்றுச் சிந்தனைகள் இவருடைய புகழ்பாடும்
பங்கெங்கும் கேட்காமல் பணமெதுவும் கேட்காமல்
தூயதமிழ்த் தொண்டாற்றும் இத்தொண்டரின் புகழ்வாழ்க
மங்கலெதும் இல்லாமல் மறத்தமிழ்ப் பணியாற்றும்
நதிகள் மணலினும் நசன்வாழ்க பல்லாண்டு

செ. எழில்வளவன், விரிவுரையாளர்
ஆசிரியர் பயிற்சி நடுவம், கீழப்பழுவூர், அரியலூர் மாவட்டம்
அலைபேசி எண் - 73731 77109