தமிழ் விழிப்புணர்வுப் பாடல்களின் இறுவட்டு


இரா. செம்பியன்
தமிழ் விழிப்புணர்வுப் பாடல் வெளியீட்டுக் குழுமம், கெங்கம்பட்டு, மேட்டுப்பாளையம் (வழி), விழுப்புரம் மாவட்டம், தொலைபேசி : (0413) 2699484, 2699485இந்த இறுவட்டு ஐந்து பகுதிகளை உடையது. ஒவ்வொரு பகுதியிலும் பத்துப் பாடல்கள் எனத் தமிழுணர்வுப் பாடல்கள் அடங்கிய இறுவட்டு இது. பலரும் விரும்புகிற பழைய திரைப்படப் பாடல்களின் இசைவடிவில் தமிழுணர்வுப் பாடல்களை உயர்தர ஒலியுடன் பதிவுசெய்துள்ள இறுவட்டு இது. ஒவ்வொரு பாடலின் தொடக்கத்திலும் இசைப்புலவர் திருமுருகனார் அறிமுகஉரையை நிகழ்த்தியுள்ளார். அறிமுக உரையைக் கேட்கும் பொழுது நெஞ்சு நெகிழும். தமிழுணர்வு மேலெழும். பாடல்களைக் கேட்கும்பொழுது தலைநிமிர்த்தித் தமிழன் நான் எனச் சொல்ல ஆற்றல் வரும். ( தமிழம் வலை இணையத்தின் பாடல் பகுதியில் இந்த இறுவட்டின் பாடல்கள் சில உள்ளன கேட்டு எழவும் )


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,