தமிழ் மென்பொருள் கருவிகள்இந்தி அரசின் தொலைத் தொடர்பு மற்றும் செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் சார்பில் தமிழுக்காகச் சென்னையில் மிகப்பெரிய விழாவில் வெளியிடப்பட்ட குறுவட்டு இது. http://www.ildc.in என்ற இணையதளத்தில் பெயர் பதிவு செய்து கொண்டவர்கள் அனைவருக்கும் இலவசமாக அனுப்பப்பட்டுவருகிறது.

இந்தக் குறுவட்டில் உள்ளவை.
தமிழில் எழுத்துருக்கள், தமிழ் விசைப்பலகை இயக்கி,
( True type fonts with keyborad)
தமிழ் எழுத்துகளைச் சரிபார்த்தல், (Tamil spell checker)
தமிழில் தட்டச்சு கற்பித்தல், (Tamil typing tutor)
தமிழ் அகராதி ஒப்புநோக்கல், (Tamil e-dictionary)
தமிழ் ஒளியியல் உரு அறிதல் (OCR - Soft ware)
மழலையர்களுக்கான பாடல்கள் (nursery rhymes)

பூனா. பெங்களூர், சென்னை ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்ட இந்த மென்பொருள் கருவிகளை ஒன்றிணைத்து அரசுசார்பில் இலவசமாக வெளியிட்டுள்ளது வாழ்த்துதற்குரிய செய்தியே. ஒளியியல் உரு அறிதல் என்பது தொடக்க நிலையில் இருந்தாலும் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு மென்பொருள் உருவாக்கப்படும் பொழுது அது நூலகத்திலுள்ள பல்வேறு நூல்களைப் புத்துருவாக்கம் செய்வதற்கு உதவுவதாக இருக்கும். அவசரம் அவசரமாக ஆக்கிய இது அந்த அளவில்தான் உள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,