வரியுருமா - மெல்லியம்


(கணியத்தில் தமிழை ஏற்றவும், மாற்றவும், அனுப்பவும்,
படிக்கவும், தொகுக்கவும் உதவுவது)கணியத்தமிழ் மென்பொருள்கள் நிறுவனத்தின் வெளியிடு இந்த எழுத்துரு - கணியத்தமிழ் சாப்ட்வேர் (பி) லிட், எண் 1, 3 ஆவது பிரதான சாலை, கே.கே.நகர் மேற்கு, சென்னை 78 இயக்குநர் திரு சி.கபிலன் அவர்களது வழிகாட்டுதலில் திரு க.ச.நாகராசன் வடிவமைத்த மெல்லியம் இது. எந்த விசை ஒழுங்கில் தமிழைத் தட்டச்சு செய்வது என்பதை பயனாளிகளே வரையறுக்கலாம். வரியுருமாவைப் பயன்படுத்தினால் - எந்தவகையான எழுத்துருவாக இருந்தாலும், பயனாளிகள் வரையறுத்த தட்டச்சு வழியிலேயே தட்டச்சு செய்யலாம். எந்த வகையான எழுத்துருவில் தட்டச்சு செய்திருந்தாலும் - பயனாளிகள் விரும்பும் எழுத்துருவிற்கு இது மாற்றித்தரும். மின் அஞ்சல் செய்யவும் - தட்டச்சு செய்ததை - யுனிகோட் எழுத்துருவிற்கு மாற்றித் தரவும் இதனால் இயலும். மின் அஞ்சல் எந்த வகையான எழுத்துருவில் தட்டச்சு செய்து வந்தாலும் அதை இதனைப் பயன்படுத்தினால் எளிமையாகப் படிததறிய இயலும்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,