இணையத்திற்கு வந்த நூல்கள் - 2

காசி ஆனந்தன் நறுக்குகள்

ஆசிரியர் : பாவலர். காசி ஆனந்தன்
வெளியீடு காசி ஆனந்தன் குடில்,
25, இராமலிங்கநகர்,
பழைய மாமல்லபுரம் சாலை,
கொட்டிவாக்கம். சென்னை 41
விலை ரூ : 50

நெஞ்சைவிட்டு அகலாத, நினைத்து நினைத்து வீறுகொள்ளத்தக்க அருமையான கவிதைகள் அடங்கிய உயரிய நூல் இது. ஆஸ்திரேலியா - சிட்னியில் உள்ள இன்பத் தமிழ் வானொலி ஏலம் விட திரு.ஏ.ஜே.மரியதாசன் அவர்கள் ரூ 1,37,025 - 00 க்கு இநத நூலை ஏலம் எடுத்துள்ளார்.
From Shore to Shore
Muthammal Palanisamy - Published by VGC Management Consultant., 2 Jalan Asa, 16 Taman Asa Jaya, 43000 Kajang, Selangor, Malaysia.

1910 களில் அன்றைய கோவை மாவட்டத்தில் வெள்ளக்கோயில் வட்டாரத்திலுள்ள ஒரு சிற்றூரிலிருந்து ஒப்பந்தத் தொழிலாளராக, மலேசியாவிற்குக் குடியேறிய ஒரு குடும்பத்தின் வாழ்க்கைப் போராட்ட உண்மைக் கதை.
நானும் என் கருப்புக் குதிரையும்

ஆசிரியர் : நெப்போலியன்
பிரித்திமா பதிப்பகம்,
14/24 காமராசபுரம், 15 ஆவது
தெரு, புதுக்கோட்டை. 622 001.
விலை ரூ : 70

இளம்வயதுப் படைப்பாளியான இவர் நுட்பமாக உணர்வுகளையும், உண்மை நிலைகளையும் உயிர்த்துடிப்போடு பாக்களாக்கியுள்ளார். இதழ்களிலும், படைப்பரங்குகளிலும் படிக்கப்பட்ட இந்தப் பாக்கள் நூல்வடிவம் பெற்றதால் பலரையும் சென்றடைந்து வாழ்த்துப்பெறும்
ஊடாடி

ஆசிரியர் : இளங்கோவன்

:தேசிய கலைமன்றம் 1992 இல் நடத்திய சிங்கப்பூர் கலை விழாவின்போது, ஊடாடி ஒரு முழு கருப்பு வர்ண ஒளி நாடகமாக அக்கினிக்கூத்துக் குழுவினரால் சூன் 19-20 தேதிகளில் சப் ஸ்டேசனின் கின்னஸ் அரங்கில் மேடை ஏற்றப்பட்டது, சிங்கப்பூரில் கூலித் தொழிலாளிகளாகத் தமிழர்கள் வாழுகிற நிலையை மிகத் துல்லியமாக நாடகமாக்கி இருக்கிறார் இளங்கோவன். ஆங்கிலம், தமிழ் என இருமொழிகளிலும் இந்த நாடகம் உள்ளது.
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி

ஆசிரியர் : இந்து மகேஷ்
வெற்றிமணி பதிப்பகம்,
ஜெர்மெனி

ஜெர்மெனியிலிருந்து வருகிற வெற்றிமணி இதழின் வெளியீடாக பூவரசு இதழின் ஆசிரியர் இந்து மகேஷ் வெற்றிமணி இதழில் எழுதிய தொடர் கட்டுரையின் தொகுப்பு நூல் இது.
மக்கள் நெஞ்சம் கல்வி வாழ்வியல் மலர்

பதிப்பாசிரியர்கள் கலசம் - கோவி
புதுவாழ்வு பதிப்பகம், 22 இரண்டாவது மாடி, 76(829) அண்ணாசாலை, சென்னை 2. விலை ரூ : 60

43 தரமான கட்டுரைகளை உள்ளடக்கி 110 பக்கங்களில் வெளிவந்துள்ள மலர் இது. பகுத்தறிவு, மொழிவளர்ச்சி, கல்விச் சிந்தனை என இயங்கி சாதனை படைத்து வருகிற "மக்கள் நெஞ்சம்" இதழ் வெளியிட்டுள்ள கல்வி மலர் இது.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,