இணையத்திற்கு வந்த நூல்கள் - 7

அய்யா - சின்னத்திரை வடிவம்

தொகுப்பாசிரியர் - ஞாநி, விலை : ரூ 80, 22.பத்திரிகையாளர் குடியிருப்பு, திருவான்மியூர், சென்னை 41.

பெரியார் பற்றிய அறிமுகத் தொடர் - கருத்துச் செறிவோடு விதைக்கிற அருமையான தொலைக்காட்சித் தொடர். இன்றைய சூழலில் தேவைப்படும் தொடர். பொதிகைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அய்யா படத்தின் அனைத்து உரையாடல்களும் அடங்கியது நூல்.
கனாக்காலம்

தொகுப்பாசிரியர் - கோவை ஞானி,
விலை : ரூ 35, 24 வி.ஆர்.வி நகர், ஞானாம்பிகை ஆலை (அஞ்), கோவை 29.

இந்நூலில் 17 படைப்பாளிகளின் படைப்பாக்கங்களை நூலாக்கியுள்ளார் கோவை ஞானி. திருமதி இராசேசுவரி பாலசுப்பிரமணியம் அவர்களது உதவியுடன் பெண் படைப்பாளிகளின் படைப்பாக்கங்களை நூலாக வெளியிடும் பணியை 1998 லிருந்து செய்து வருகிறார்.
மழை ஓய்ந்த நேரம்

ஆசிரியர் : இ.இசாக்
email : ishaqi74@yahoo.com,
விலை ரூ 30,
சாரல் வெளியிடு,
189. அபிபுல்லா சாலை,
தி.நகர், சென்னை 17
.

நெஞ்சில் நிற்கிற குறும்பாக்களின் தொகுப்பு நூல். நூலாசிரியர் தற்பொழுது அமீரகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
சோளகர் தொட்டி

விலை : ரூ 100, ச. பாலமுருகன், வனம் வெளியிடு, 17. பாவடித் தெரு, பவானி, 638 301. email: sabalamu@rediffmail.com

தமிழ்ச் சிற்றிதழ்கள் அனைத்தும் பாராட்டுகிற நூல். ஒடுக்கப்பட்ட மலைவாழ் மக்களது நிலையைக் காட்டுகிற அருமையான உண்மை நிகழ்வுப் பதிவு நூல்.
மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்

Malaysian Tamil Writers Association, No.11 Jalan Murai Dua, Battu Complex, Off Jalan lpoh, 51200 - Kuala Lumpur, Malaysia. Ph: 006-013-3609989

விலை : ரூ 100

மலேசியாவிலுள்ள அனைத்துத் தமிழ் எழுத்தாளர்களின் புகைப்படங்கள், முகவரிகளோடு இந்த நூல் படைப்பாளர்களை அறிமுகம் செய்கிறது. ரெ.கார்த்திகேசு மலேசிய இலக்கியம் பற்றிய அறிமுகக் கட்டுரை எழுதியுள்ளார். பாதுகாக்க வேண்டிய நூல்.
மலேசியத் தமிழ் இலக்கியம்
ஓர் அறிமுகம்

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
மலேசியா.விலை : ரூ 50

மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் பெ.இராசேந்திரன் தலைமையில் தமிழகம் வந்தபொழுது வெளியிட்ட நூல்.
மரபுக் கவிதை (முரசு.நெடுமாறன்), சிறுகதை (ரெ.கார்த்திகேசு), நாவல் (வே.சபாபதி), கட்டுரை (முல்லை இராமையா), புதுக்கவிதை (கோ.புண்ணியவான்), ஹைகூ (ந.பச்சைபாலன்), மேடை நாடகம் (ரெ.சண்முகம்), வானொலி - தொலைக்காட்சி நாடகம் (பாமா) - கட்டுரைகளை எழுதியுள்ளனர்.
நேர்கோடுகள் சிறுகதைத் தொகுதி

ஆசிரியர் : மா. நயினார்

வெளியீடு
எண் 20-2816 கோகுலம்,
அம்மன் கோவில் சமீபம்,
கரமனை, திருவனந்தபுரம்,
அ.கு.எண் : 695 002

விலை : ரூ 60

இயல்பு வாழ்வின் நிகழ்வுகளைப் படம்பிடித்துக் காட்டுகிற அருமையான சிறுகதைத் தொகுப்பு.
பறையர் ஒரு வரலாற்றுச் சுருக்கம்

ஆசிரியர் : புங்கனூர் இராமண்ணா
வெளியீடு
தாத்தா ரெட்டமலை சீனிவாசன்
அரும்பணி மன்றம் (அறக்கட்டளை),
குறளகம், பொன்னி நகர்,
புங்கனூர், இராம்ஜிநகர் (அஞ்),
திருச்சி - 620 009

விலை : ரூ 50

பறையர் வரலாறு தமிழர் வரலாறு. ஒடுக்கப்பட்டவர் வரலாறு. மீண்டும் எழுவது எப்படி என்கிற கருத்துகளடங்கிய தரமான நூல்.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,