இணையத்திற்கு வந்த நூல்கள் - 8

குடியரசு 1926

முதல் பகுதி
தொகுப்பு - 2

பெரியாரின்
எழுத்தும் பேச்சும்

தந்தை பெரியார்
திராவிடர் கழகம்,
சென்னை - 28
விலை ரூ 150

1926 ஆம் ஆண்டின் முதல் ஆறுமாத "குடி அரசு" இதழில் உள்ள "பெரியாரின் எழுத்தும் பேச்சும்" இந்த இரண்டாவது தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீமான் இராஜகோபாலாச்சாரியார் தொடங்கி 152 கட்டுரைகளையும், பின்னிணைப்பாக கட்டுரை வெளிவந்த இதழ் எண், பக்க எண் ஆகியவற்றைத் தந்துள்ளது. ஆய்வாளர்களுக்கு உதவுகிற அரிய நூல். கட்டுரைகளின் வழித் தமிழக வரலாறு காட்டும் அடித்தள நூலாக இது அமைந்துள்ளது.

தமிழ் எண் சுவடி

(தமிழ் எண்களில்)

ரி. இராசேந்திரன்
39.மோகன் தோட்டம்,
பழைய தொடர்வண்டி
நிலையம்,
ஈரோடை - 2

விலை ரூ 5

முதல் வகுப்பு மாணவர்கள் பயன்படுத்த உதவுகிற எண்சுவடி. இதில் அனைத்து எண்களும் தமிழ் எண்களாக உள்ளன. 1 முதல் 100 வரை எண்கள், பெருக்கல் வாய்பாடு, கூட்டல் வாய்பாடு, கழித்தல் வாய்பாடு மற்றும் அளவை முறைகள் என அனைத்தும் தமிழ் எண்களிலேயே உள்ளது. முதல் வகுப்பு மாணவர்கள் இதனைப் பயன்படுத்தினால் தமிழ் எண்களை இயல்பாக எழுதுவதோடு படிக்கவும் செய்வார்கள். இது ஒரு புதிய முயற்சி. வாழ்த்துதற்குரியதே.

புலவர் குழந்தை

தொகுப்பு

இரா.மனோகரன்,
கா.கருமலையப்பன்
65, காந்திமண்டவீதி
பொள்ளாச்சி.

விலை ரூ 5

நூற்றாண்டு விழாக் காணும் புலவர் குழந்தை அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வெளியிடப்பட்ட வெளியீடு இது. இராவணகாவியம் நூலின் முன்னுரையிலிருந்து எடுக்கப்பட்டு, தொகுக்கப்பட்டது இது. பேரறிஞர் அண்ணா, கலைஞர், நெடுஞ்செழியன் எழுதியுள்ள குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. இராவணனை உயர்த்திப் பிடித்து, அதன்வழி - தமிழ்ச் சமுதாயத்திற்கு உரமேற்றுகிற இராவண காவியம் படிக்கத் தூண்டுவதாக இச்சிறு வெளியீடு அமைந்துள்ளது.

பொதிகைத் தென்றல்

உரைவீச்சுகள்

செண்பக ஜெகதீசன்,
45 வடக்குச் சாலை,
திருநெல்வேலி - 6

விலை ரூ 45

வழிபாடு நடக்கட்டும், இயற்கை இருக்கட்டும், மனிதம் மலரட்டும், பெண்மை மிளிரட்டும், காதல் கனியட்டும், வாழ்க்கை சிறக்கட்டும், அரசியல் அசத்தட்டம், பலவும் பெருகட்டும், என்றும் நிலவட்டும் - என்கிற தலைப்புகளில் ஆசிரியர் எழுதித் தொகுத்த உரைவீச்சுகளின் தொகுப்பு நூலாக இது உள்ளது. மக்களுக்கான இடர்பாடுகளை, ஒடுக்குதல்களை, மறுக்கப்படுபவைகளை சிறப்பாக உள்வாங்கிய ஆசிரியரின் எளிமையான உரைவீச்சுத் தொகுப்பு இது.

வள்ளுவரும் வாழும் குறளும்

பன்முக ஆய்வு

மு.பெ.இராமலிங்கம்

உலகக் கலைத்தமிழ் மன்றம்
97.சித்தாதோட்டம்.
கணபதி, கோவை 6
விலை ரூ 75

வள்ளுவரின் காலம், வாழ்க்கை வரலாறு, தமிழ் எழுத்துகள் வளர்ந்த விதம் எனப் பல செய்திகளை உள்ளடக்கியதோடு, ஒரு சில திருக்குறளுக்கான விளக்கத்தைப் புதிய கோணத்திலும் குறிப்பிட்டுள்ளார். திருக்குறளுக்கான கற்றுஆய்ந்த பலரது விளக்கத்தைக் குறிப்பிட்டுள்ளதோடு தன் சொந்த ஆய்வில் ஒப்பு நோக்கியும் எழுதியுள்ளார்.
வள்ளுவமாலையைக் குறிப்பிட்டு அதுபற்றியும் ஆய்ந்துள்ளார்.

அறம் நானூறு

அகவற்பாடல்களின் தொகுப்பு

மு. குப்புசாமி

18. மேற்கு பூங்காச் சாலை
செனாய் நகர்
சென்னை 30

தமிழர்கள் பிரிந்து கிடந்தபோது சைவசமய நால்வர்கள் தோன்றி வைசம்வழித் தமிழை, தமிழுணர்வை விதைத்தது வரலாறு. அதுபோல இந்த நூல் தமிழ் உணர்வை விதைத்து மக்களை இணைக்கப் பயன்படுமானால் இதுவும் காலம்கடந்து பேசப்படும். இந்நூல் நால்வரது இயக்கத்தை, சிறப்பை அகவற்பாடல்களில் இசையோடு அமைத்துக் கருத்து விதைத்துள்ளது.

தெளிவைத் தேடி

கருத்துத் தொகுப்பு

ஆசிரியர் நடனம்

வெளியீடு
குகன் பதிப்பகம்
30.கந்தசாமி சாலை
பெரியர் நகர்
சென்னை.

ஆன்மீகம் தொடர்பாக ஆசிரியர் கண்டறிந்த உண்மைகளின் பதிவாக இந்நூல் உள்ளது. தெளிவு என்பது தன்நிலை உணர்நது மக்களுக்காகப் பயணிப்பதே. மக்களுக்குள் இறையைக் காணும் உயர்தன்மையை ஆன்மீகம் விதைக்க வேண்டும். சித்தர்களின் பாதை இது. இந்தப் பாதை காண இங்கு யாருளர்?

ஓரடி முன்னே

சிறுகதைத் தொகுப்பு

பொள்ளாச்சி அம்பலம்

வெளியீடு
த.மு.எ.ச. கோவை,
33.17 லட்சுமிநகர்,
தண்ணீர்பந்தல், பீளமேடு,
கோவை - 641 004
விலை ரூ 35

மனிதநேயம் பேசுகிற தரமான 13 சிறுகதைகளின் தொகுப்பு நூல். பொள்ளாச்சி அம்பலம் பாரதிதாசனோடு நெருங்கிப் பழகிய குமாரசாமி அவர்களது மகன். செம்மலரில் இவரது கதைகள் வெளியாகியுள்ளன. இவரது நினைவாகத் தொகுக்கப்பட்டுள்ள இச்சிறுகதைகள் இவரது நுட்பத்தையும், மனித மனங்களை ஆழமாகக் காணுகிற தன்மையினையும் சிறப்பாகக்காட்டும் அருமையான நூல்.

நால்வர்

கவிதைத் தொகுப்பு

பதிப்பாசிரியர் கரு.திருவரசு

வெளியீடு பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்கம்
54. சாலான் சியாம்.,
10400 பினாங்கு,
மலேசியா.
விலை 10 வெள்ளி

பதினைந்தாம் நூற்றாண்டின் இரட்டைப் புலவர்களைப்போல 1970 களில் மலேசியாவின் மு.சேது, கே.முகம்மது யூசுப், மைதீ.அசன் கனி, கரு.திருவரசு ஆகிய நால்வரும் ஒருகருத்தை யொட்டி இணைந்துபாடி வெற்றி கண்ட சில பாடல்களின் தொகுப்பு நூல் இது. இந்த நூலிலுள்ள கால் எனத்தொடங்கி கை என முடியும் 4 வெண்பாக்களினை இந்த வலையேற்றத்திலுள்ள சுவைத்த பக்கங்கள் பகுதியில் காணலாம்

பிழை திருத்தம்

தமிழ்ச் சொற்புணர்ச்சி
விளக்க நூல்

கரு. திருவரசு,

வெளியீடு பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்கம்
54. சாலான் சியாம்.,
10400 பினாங்கு,
மலேசியா.விலை ரூ 25

எழுதும் பொழுதும் பேசும் பொழுதும் நாம் பயன்படுத்துகிற சொற்களில் எது சரி ? எது சரியில்லை என்ற வினா அடிக்கடி மேலெழுந்து, விளக்குவதற்கு ஆள்களில்லாமல் அமிழ்ந்து விடும். நம் நெஞ்சில் எழுந்த இது போன்ற வினாக்களுக்கு விடையளிக்கிற நூல் இது.
(அடிதளம் - அடிக்குமிடம், அடித்தளம் - கீழ்த்தளம்) (கைகுட்டை - நீளம் குறைந்த கை, கைக்குட்டை - சதுர வடிவச் சிறுதுணி) இப்படிப் பல.

தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,