புகைப்படங்கள்
தொகுப்பு 02

அரிய புகைப்படம்

தஞ்சாவூரில் நடந்த முதல் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கக்கூட்டம். பொள்ளாச்சி நசன், வலம்புரிலேனா, சுகன், வெற்றிப்பேரொளி, மணிமொழி, குன்றம் ராமரத்நம், ஊட்டி மருத்துவர், இராஜா சொர்ணசேகர், சேலம் பாலன்.
கலைநுட்பப் புகைப்படம்

புகைப்படக் கலைஞர் : திரு. இரா, இரவி - மதுரை

இன்று கட்டுவது

இடிந்து விழுகிறது.

1636 இல் கட்டியது

நின்று

காட்டுகிறது.

இலக்கியத்தையும்

தொழில் நுட்பத்தையும்.


கொம்பு மோதி

வயிறு கிழிந்து

உயிரிழப்பது

வீரவிளையாட்டாம்.

படப்பிடிப்புக்

கருவிக்கு முன்

வீரம் இழந்த

மனிதன்.இயங்குவோர் புகைப்படம்

உலகத் தமிழர்

ஆவணக் காப்பகப்

பணியில்

தனது

நூலகத்தில்

இயங்கும்

குரும்பசிட்டி

இரா.கனகரத்தினம்.சரஸ்வதி ஆசிரியர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்தபோது கோட்டை ரெயில்வே நிலையத்தில் (26-11-1960) இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் பிரபல எழுத்தாளர்கள் பலர் வரவேற்பு அளித்தனர். முற்போக்கு எழுத்தாளர் சங்கக் காரியதரிசி பிரேம்ஜி, கலாநிதி கா.சிவத்தம்பி, டொமினிக் ஜீவா, செ.கணேசலிங்கம். இளங்கீரன் மற்றும் பலர். (படப்பிடிப்பு - கிங்ஸ்லி. எஸ்.செல்லையா - கொழும்பு 14)
தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,