புகைப்படங்கள்
தொகுப்பு 12

புகைப்படக் கலைஞர் : தமிழ்க்கனல், பொள்ளாச்சி.
நம்மைச் சுமக்கும்
நாமதைச் சுமக்க
நம்மால் இயலாது
தாயாய் வீதியில்

புகைப்படக் கலைஞர் : தமிழ்க்கனல், பொள்ளாச்சி.
தமிழ் பள்ளி
பசுமைப்பள்ளி
மழலைகளும்
பசுமையாய்
ஈரநெஞ்சுடன்.
ஆங்கிலக்கல்வி
அடுக்கிய கட்டடம்
நெருக்கிய நெஞ்சம்
சிதைகின்றன
மழலைகள்

புகைப்படக் கலைஞர் : கார்த்திக் இராமலிங்கம் - நொய்டா, உ.பி.
அசையாது
நிற்கும்
இவை
அசைத்தது
அனைத்தையும்

புகைப்படக் கலைஞர் : கார்த்திக் இராமலிங்கம் - நொய்டா, உ.பி.
மேலெழுந்து
கீழிறங்கி
மென்மையாய்
அசையும்
இவை
இணைக்குது
அனைத்தையும்

புகைப்படக் கலைஞர் : கார்த்திக் இராமலிங்கம் - நொய்டா, உ.பி.
இன்று
தொட்டுப் பார்த்து
நடந்து பார்த்து
மகிழ்வது
அன்று
பார்க்கவே முடியாதது
வரலாறு
மேலதைக் கீழாக்கும்
கீழதை மேலாக்கும்

புகைப்படக் கலைஞர் : கார்த்திக் இராமலிங்கம் - நொய்டா, உ.பி.
காணக்
கண்
கோடி
வேண்டும்
இந்தக்
கலையின்
நிலை உணர
வேண்டும்

புகைப்படக் கலைஞர் : கார்த்திக் இராமலிங்கம் - நொய்டா, உ.பி.
அடுக்கப்பட்டது
தூண்களா ?
இல்லை
அனைவரை
ஈர்க்கும்
கண்களா ?

புகைப்படக் கலைஞர் : தமிழ்க்கனல் - பொள்ளாச்சி 6.
இடிக்கப்படுவதெல்லாம்
கட்டுவதற்காகத்தான்
இருந்தாலும்
இடிக்கும்போது
நெஞ்சு
தடுமாறுகிறது.

புகைப்படக் கலைஞர் : கார்த்திக் இராமலிங்கம் - நொய்டா, உ.பி.
வாள் முனையா!
வேல் முனையா!
மை விழியா!
கருங்குழலில்
பூத்த
செம்மலரா ?
ஆடாமல்
நின்றிருக்கும்
ஒளிப்பரப்பா ?

தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,