புகைப்படப் பக்கம் வரிசை எண் : 16

புகைப்படக் கலைஞர் : தமிழ்க்கனல் - பொள்ளாச்சி..
நிலைத்து நிற்கும்
மலையை
மறைத்தன,
கையூட்டு வாங்கும்
முட்செடிகள்.
அழகுகாட்டி
நிலையெனச்
சொல்லிக்
கைகோர்த்தபடி
தமிழகத்தில்....

புகைப்படக் கலைஞர் : தாம்பரம் ஆனந்த் - சென்னை.
கூடு கட்டத்
தெரியாமல்
போனாலும்
சுதந்திரமாய்க்
கூவித்திரிகிறது
பறவை.
அனைத்தும்
தெரிந்த இவன்
அடிமையாய்த்
தமிழகத்தில்....

புகைப்படக் கலைஞர் : பேராசிரியர் சங்கீதா - சென்னை.
வயிற்றில்
தோளில்
முதுகில்
சுமக்கிறாள்
சின்ன
விழிகளை.
சுமந்தவளைச்
சுமக்குமோ
விழி ?

பரிசு பெறுபவர் - அழகி எழுத்துருக்கள் ஆக்கிய விசுவநாதன் - சென்னை.
பாராட்டுகள்
வாழ்த்துகள்
பரிசளிப்புகள்
மனிதனை
ஊக்கும்.
தன்னலம்
இல்லாது
பாராட்ட
மனிதம்
வேண்டும்

புகைப்படக் கலைஞர் : தாம்பரம் ஆனந்த் - சென்னை.
மதில் மேல்
பூனை.....
எங்கு தாவும்?
யாருக்குத்
தெரியும்?....
யாருக்குத்
தெரியாது?....
வினாக்கேட்டவர்
இறந்து போனார்
பூனை இன்னும்
மதில் மேலேயே.

புகைப்படக் கலைஞர் : தமிழ்க்கனல் - பொள்ளாச்சி.
பனையில்
எத்தனை வகை
பார்த்துப் பார்த்து
பெருமிதம்
கொண்டார்
பனை ஏறும்
தொழிலாளி.
அமைதியாய்ச்
சூரியன்
அடிவானத்தில்

புகைப்படக் கலைஞர் : கார்த்திக் - நொய்டா - உத்திரப்பிரதேசம்.
ஒன்றன் மீது
ஒன்றாக
ஒட்டப்பட்டு
கரை நீளத்திற்கு
அடுக்கப்பட்ட
வீடுகளும்
அந்த ஆற்றில்..

இறந்தவர்களை
இழுத்து விடுவதும்
அந்த ஆற்றில்..

வாழ்ந்தவர்களுக்கும்
வாழ்பவர்களுக்கும்
ஒரே ஆறு...

புகைப்படக் கலைஞர் : கார்த்திக் - நொய்டா - உத்திரப்பிரதேசம்.
குரங்கு
தெய்வம்
ஆனபொழுது
குரங்கு
பெருகியது.,
சுதந்திரமாய்த்
திரிந்தது.

குரங்கு
குரங்கான
பொழுது
சாகடிக்கப்பட்டது

புகைப்படக் கலைஞர் : கார்த்திக் - நொய்டா - உத்திரப்பிரதேசம்
மயிலிறகு ஏற்றிய
வண்டியே ஆனாலும்
குடை சாயும்
வள்ளுவர் சொன்னது
உண்மைதான்.
அளவுக்கு
அதிகமாக
ஏற்றினால்? அரசும்
தலைசாயும்.

புகைப்படக் கலைஞர் : கார்த்திக் - நொய்டா - உத்திரப்பிரதேசம்
நடக்கிற
அனைத்தையும்
மேலே உள்ளவன்
பார்த்துக்குவான்
சொன்னவன்
இதைக் கண்டா?
மேலே உள்ளவன்
மேலே மேலே
ஏறத்தானே
பார்க்கிறான்.
கீழெங்கே
பார்க்கிறான் ?

புகைப்படக் கலைஞர் : இரவிக்குமார், கோவை.
குப்பை மூட்டையும்
குளிரூட்டிய
ஊர்தியும்
அருகருகேதான்
இருட்டறையில்
உள்ளதடா நீதி

ஏழை
இல்லை எனச்
சொல்பவனும்
இருக்கின்றானே

தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,