13 ஆவது ஆண்டுநிறைவு திருவிழா.

நம் தலைவர் ஸ்ரீ கல்யாண சுந்தரரே வருக
உங்கள் வரவு நல்வரவாகுக - 6 - 5 - 1929

ஈரோட்டிற்கு அருகில் உள்ளது கருங்கல்பாளையம்.

இங்குள்ள நூலகத்தின் 13 ஆவது ஆண்டு நிறைவு விழாவிற்கு திரு கல்யாண சுந்தரனார் அவர்கள் வந்திருக்கிறார்கள். 1929 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த அரிய புகைப்படத்தை மறைந்த தமிழ்த்திரு ஆறுமுகம் (ஆடிட்டர்) அவர்களது நூலகத்திலிருந்து எடுத்து வந்தேன்.

நடுவில் அமர்ந்திருப்பவர் திரு.வி.க. அவர்கள். இந்தப் படத்தில் உள்ள மற்றவர்களைப் பற்றி எந்தக் குறிப்பும் எனக்குக் கிடைக்கவில்லை.

ஈரோடு கருங்கல்பாளையத்தில் 6-5-1929 அன்று நடந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட இந்தப் படத்திலுள்ளவர்கள் பற்றிய குறிப்பினை, இதுபற்றித் தெரிந்த பார்வையாளர்கள் எழுதி அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இது ஒரு வரலாற்றுப் பதிவு. இது போல புகைப்படங்கள் வைத்து இருப்பவர்கள் அருள்கூர்ந்து அனுப்பி வைக்கவும். பதிவு செய்ய விரும்புகிறேன். இழந்துபோன நம் வரலாற்றின் பல பக்கங்கள் இதுபோன்ற புகைப்படங்களிலும் இருக்கின்றன.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,