வியப்பூட்டும் திருமண அழைப்பிதழ்.

பேராசிரியர் பெரியார்தாசன் அவர்களது மகன் வ.சி.வளவனுக்கும், ம.து.வாலண்டீனாவுக்கும் 16.5.04 அன்று நடைபெறுகிற திருமணவிழாவிற்கும், 19.5.04 அன்று நடைபெறுகிற வரவேற்பிற்குமான அழைப்பிதழ் இது. அழைப்பிதழ், 38 பக்கங்களில் சிறு நூலாக, பெண் என்னும் பேரழகு, காதல் குறிப்பு, இணையும் இன்பம், என்ன அழகு, காதல் சுகம், கூடித்தழுவும் பேரின்பம், என்கிற 6 தலைப்புகளில் 60 திருக்குறளையும் அதற்கான விளக்கத்தை 60 சுவையான உரைவீச்சிலும் தந்துள்ளது வியப்பூட்டுவதாக உள்ளது. சடங்குகளையும் தமிழ் வளர்ச்சிக் கருவிகளாக ஆக்குகிற இதுபோன்ற தமிழுள்ளங்கள் இன்னும் பெருகட்டும்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,