இழுத்தால் படம் மாறும் சினிமாப் பாட்டுப் புத்தகம்


சிவாஜி கணேசன் அளித்த எங்க ஊர் ராஜா திரைப்படத்தின் சினமா பாட்டுப் புத்தகம் இது. சன்னலுக்குப் பின்னால் இரண்டு படங்களை உள்ளடக்கிய அட்டையை உடையது இந்தப் பாட்டுப் புத்தகம். இதன் அட்டைப் பக்கத்தில் உள்ள இழு என்ற துண்டு அட்டையை இடது புறம் இழுத்தால் மேலே உள்ள படமும், வலது புறம் இழுத்தால் கீழே உள்ள படமும் கிடைக்கும். பாடல்கள் அனைத்தும் கவிஞர் கண்ணதாசன் எழுதியது. "யாரை நம்பி நான் பொறந்தேன போங்கடா, போங்க " இந்தப் படத்தின் இறுதிப்பாடல்.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,