அஞ்சல்தலைகள் ஒளிர்ந்தன

இந்த வாரம் வியந்தவைகள் பகுதிக்கு ஒன்றும் கிடைக்கவில்லையே என்ன செய்வது என்ற வருத்தத்தோடு விளக்குகளை அணைத்துவிட்டு படுத்தேன். அறை முழுவதும் இருட்டு. மேசையின் மீது மூன்று சதுரங்கள் ஒளிர்ந்தன. இது என்ன புது வெளிச்சம் என்று வியப்போடு எழுந்து விளக்கைப் போட்டேன்.

மேசையின் மீது மலேசியாவிலிருந்து நண்பர் திருவிடச் செல்வன் அனுப்பியிருந்த மடல் உறையைக் கண்டேன். வியந்தேன்.

உறையில் ஒட்டப்பட்டிருந்த அஞ்சல் தலைகள்தான் விளக்கை அணைத்ததும் ஒளிர்ந்தன என்று கண்டறிந்தேன். மீண்டும் விளக்கை அணைத்து விட்டுப் பார்த்தேன். அஞ்சல்தலைகள் ஒளிர்ந்தன. நான் வியந்த அந்த அஞ்சல்தலைகளை இணையத்தில் வலையேற்றி, உங்களோடு இதனைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறேன் - பொள்ளாச்சி நசன் - ( பார்வையாளர்கள் தாங்கள் கண்டு வியந்தவற்றை அனுப்பி வைத்து உதவவும்)
தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,