தமிழ் எண் சுவடி

தமிழ் மழலையர்கள் பயன்படுத்துவதற்கான தமிழ் எண் சுவடி இது. ஈரோடு புலவர் செ.இராசு அவர்களது முயற்சியால் இந்தச் சுவடி ஆக்கப்பட்டுள்ளது. இந்தச் சுவடியில் எண்களுக்கான தமிழ் வடிவமும், பெருக்கல் கூட்டல், கழித்தல் போன்றவற்றுக்கான தமிழ் எண்களைப் பயன்படுத்திய கணித வாய்பாடுகளும் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் கோலளவு, துலாஅளவு, காலளவு, காசுஅளவு, தானிய அளவு, நாளளவு போன்றவைகளும் தமிழ் எண்களில் கொடுக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமல்லாது தமிழ் எழுத்துகளின் பழைய வடிவங்களும் சுவடியில் தரப்பட்டுள்ளன. அருமையான முயற்சி இது. சுவடியின் விலை ரூ5 மட்டுமே. தொடர்புக்கு ரி.இராசேந்திரன், 39.மோகன் தோட்டம், பழைய தொடர்வண்டி நிலையம், ஈரோடை 2. (படத்திலுள்ளது 19, 20 ஆம் பெருக்கல் வாய்பாடு)தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,