உள்ளங்கைக்குள் அடங்கும் திருக்குறள்

மலேசியாவைச் சேர்ந்த கே.சுப்பிரமணியம் அவர்கள் திருக்குறளின் பெருமையையும் நுட்பத்தையும் உலகுணர்த்துதல் வேண்டி, 1330 திருக்குறளையும், நாலேகால் சென்டிமீட்டர் அகலமுடைய, மிகச் சிறிய அளவிலான உள்ளங்கைக்குள் அடங்கக்கூடிய வகையிலுள்ள வியக்கவைக்கும், நூலாக அச்சாக்கி வெளியிட்டுள்ளார்.

அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகுத்திய குறளை உள்ளங்கைக்குள் வைத்துப் போற்ற நமது வாழ்வு சிறக்கும். குறளை நம் வாழ்மறையாகக் கொள்ள நெஞ்சு நிமிரும். நாளொரு குறளாக உள்ளுணர்ந்து, செயற்பட, அனைத்துச் செயல்களிலும் நுட்பமும், தெளிவும், அறிவும் கிட்டும்.

நம் தமிழ் மக்கள் தமிழ் மறையான திருக்குறளைக் கற்றுணர்ந்து செயற்படுத்துவார்களாக.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,