சூடாமணி நிகண்டு
தேவப்பெயர்த் தொகுதி

அருகன் பெயர்

அநகன், எண்குணன், நிச்சிந்தன், அறவாழிவேந்தன், வாமன், சினன், வரன், உறுவன், சாந்தன், சினேந்திரன், முனைவன், மாசேனன், தேவன், மூவுலகுணர்ந்தமூர்த்தி, புனிதன், வென்றோன், விராகன், பூமிசை நடந்தோன், போதன்

பண்ணவன், கமலவூர்தி, பரமேட்டி, காதிவென்றோன், புண்ணியன், புலவன், புத்தன், பூரணன், பொன்னெயிற்கோன், விண்ணவன், விமலன், வீரன், விநாயகன், வீதசோகன், அண்ணல், மதனைவென்றோன், அருட்கொடிவேந்தன், ஆசான்

முத்தன், மாமுனி, கருத்தன், முக்குடைச்செல்வன், முன்னோன், சித்தன், எண்சிறப்பு, முள்ளோன், திகம்பரன், கொல்லாவேதன், நித்தன், நின்மலன், நின்னாமன், நிராயுதன், நேமிநாதன், அத்தன், ஆனந்தன், சோதி, அரியணைச்செல்வன், ஆதி

ஆத்தன், குற்றங்களில்லான், அசோகமர்கடவுள், ஆதன், சாத்தன், வேதாந்தன், நாதன், சமி, அநாமயன், சுயம்பு, நீத்தவன், பிதா, விதாதா, நிரமபரன், அனந்தஞானி, தீர்த்தன், மால், பகவன், சாமி, சீபதி, சீமான், செய்யோன்

நிருமலன், வரதன், சாது, நிரஞ்சனன், விறலோன், யோகி, தருமராசன், யுகாதி, சதுர்முகன், சாதரூபி, தருமறுமார்பன், சிவகதிக்கிறை

சிவன் பெயர்

சங்கரன், இறையோன், சம்பு, சதாசிவன், பேயொடாடி, அரவணிந்தமூர்த்தி, புராந்தகன், பூதநாதன், கங்கைவேணியன், கங்காளன், கடுக்கையங்கண்ணிருடி, மங்கையோர்பாகன், முன்னோன், மகேச்சுரன், வாமதேவன்

நீலகண்டன், மாதேவன், நிருமலன், குன்றவில்லி, குலபாணியன், ஈசானன், பசுபதி, சுடலையாடி, காலகாலன், கபாலி, உருத்திரன், கைலையாளி, ஆலமர்கடவுள், நித்தன், ஐம்முகன், பரசுபாணி

இறை, சதானந்தன், எண்கணன், விதி, சுயம்பு, மறையவன், அநந்தன், ஞானி, மான்மகன், வாணிகேள்வன், பகவன், வானோர் முதல்வன், நான்முகன், விரிஞ்சன், கமலயோனி,

புத்தன் பெயர்

தருமராசன், முனீந்திரன், சினன், ததாசகன், ஆதி, தேவன், சாக்கியன், சைனன், விநாயகன், சினந்தவிர்ந்தோன், அரசுநீழலிலிருந்தோன், வான், பகவன், செல்வன்

அண்ணல், மாயாதேவிசுதன், அசுளங்கமூர்த்தி, கலைகட்கெல்லாநாதன், முக்குற்றமில்லேரன், எண்ணில்கண்ணடையோன், வாமன், புண்ணியத்தின் மூர்த்தி, புண்ணிய முதல்வன், சாந்தன், பூமிசை நடந்தோன்

இந்திரன் பெயர்

மேகவாகனன், வேள்விக்கவேந்தன், விண்முழுதுமாளி, பாகசாதனன், வச்சிரபாணி, கோபதி, நாகநகர்க்கு நாதன், நான்மருப்பியானையூர்தி, போகி, வாசவன், வேந்தன், புரந்தரன், புலவன், சக்கிரன்

மருதநிலத்து வேந்தன், மருத்துவன், வானோர்கோமான், புருகூதன், சசிமணாளன், புரோகிதன், கெளசிகன், கரியவன், சுனாசீரன், ஆகண்டலன், வலாரி, அரி, சதக்கிரது, ஆயிரங்கண்ணன்

விநாயகன் பெயர்

அங்குசபாசமேந்தி, அம்பிகைதனயன், முன்னான், ஐங்கரன், மூத்தோன், ஒற்றைமருப்பினன், ஏரம்பன், கங்கைபெற்றோன், முக்கண்ணன், கணபதி, ஈசன்மைந்தன், சுயமுகன், ஆகவாகனன்

வீரபத்திரன் பெயர்

உக்கிரன், அழற்கண்வந்தோன், உமைமகன், சிம்புளானோன், முக்கணன், சடையோன், யானைமுகவனுக்கிளையோன், வில்லி, செக்கர்வானிறத்தன், குரோதன், சிறுவிதிமகஞ்சிதைத்தோன், பத்திரைக்குக்கேள்வன்

கந்தன் பெயர்

முருகன், வேள், சாமி, ஆறுமுகன், குகன், குழகன், மாயோன்மருகன், சேய், கார்த்திகேயன், வரைபகவெறிந்தோன், செட்டி, அரண்மகன், கங்கைமைந்தன், ஆண்டலைக்கொடியுயர்த்தோன், சரவணபவன், கடம்பன், தாரகற்செற்றோன், ஆசான்

குறிஞ்சி வேந்தன், வேலினுக்கிறை, விசாகன், சேந்தன், காங்கேயன், செவ்வேள், சிலம்பன், மஞ்ஞையூர்தி, சூர்ப்பகைவன், வள்ளிமணவாளன், தெய்வயானைகாந்தன், குமரன், புலவன்

காமன் பெயர்

திருமகண்மைந்தன், மாரன், சித்தசன், சம்பராரி, உருவிலி, மன்மதன், மீன்கொடியுயர்த்ததோன்றல், இரதிகாதலன், வசந்தன், வேனிலாளி, கருப்புவில்லி, கந்தர்ப்பன், மதன், பூவாளி

திங்கள் வெண்குடையோன், தென்றற்றேரினன், வில்லி, மோகன், ஐங்கணைக்கிழவன், வேள், அநங்கன், மான்மைந்தன், மனோபவன், மனோசன், அங்கசன், மனோபு, ஆழிமுரசோன்

வைரவன் பெயர்

முத்தன், குமரன், பிள்ளை, முடுவற்படையோன், காரி, சித்தன், சேத்திரபாலன், செந்தொடைக்குரியகோமான், வித்தகன், ஞாளியூர்தி, கருங்குதிரையாளி, வடுகன்

ஐயன் பெயர்

காரி, புறத்தவன், கடல்வண்ணன், சாத்தா, பூரணை கேள்வன், யோகி, புட்கலைமணாளன், மாசாத்தன், செண்டாயுதன், வெள்ளையானையூர்தி, ஆரியன், அறத்தைக்காப்போன், அரிகரகுமரன்

குபேரன் பெயர்

அரனது தோழன், கின்னரர்பிரான், அளகையாளி, புருடவர்கனன், சோமன், புட்பகவிமானமுள்ளோன், இருநிதிக் கிழவன், ஏகபிங்கலன், இயக்கர்கோமான், மரகதன், தனதன், மந்திரி, வைச்சிரவணன்

யமன் பெயர்

சமன், செங்கோற்கடவுள், கூற்று, தருமன், அந்தகன், சண்டன், நமன், வைவச்சுதன், நடுவன், தென்றிைச்கோள், அரி, மறலி, எருமையூர்தி

காலன் பெயர்

கால், மறல், மடங்கல், பாசத்தன்

தருமதேவதையின் பெயர்

மரகதவல்லி, பூகநிழலுற்றவஞ்சி, பரமசுந்தரி, இயக்கி, பகவதி, அம்மை, அருகனைமுடிதரித்தாள், அம்பிகை, அறத்தின்செல்வி, அம்பாலிகை,

உமையின் பெயர்

அரனிடத்தவள், காமக்கோட்டத்தி, அம்பிகை, மாதா, தருமத்தின்செல்வி, தேவி, சாம்பவி, மலைமடந்தை, பரை, சிலை, கெளரி, பார்ப்பதி, பவானி, சக்தி, நாரி

கங்கையின் பெயர்

வரந்தி, மந்தாகினி, திரிபதகை, சுரநதி, சானவி, பகீரதி

காடுகாள் பெயர்

மூதணங்கு, மோடி, கொற்றி, சூரி, வடுகி, மாரி, வடுகன்றாய்

திருமகள் பெயர்

கடற்பிறந்தகோதை, மா, அரிப்பிரியை, செய்யாள், ஆக்கம், பொன், பொறி, சீதேவி, அலர்மகள், பொருளின்செல்வி, தாக்கணங்கு, இளையாள், பூமின், இலக்குமி, சலசை, இந்திரை

நாமகள் பெயர்

கலைமகள், பனுவலாட்டி, காயத்திரி, ஞானமூர்த்தி, உலகமாதா, பிராமி, வெள்ளைமெய்யாள், வெண்சலசமுற்றாள், பாரதி, இசைமடந்தை, அயன்மனைவி, வாக்காள், வானி

மூதேவியின் பெயர்

சேட்டை, இந்திரைக்கு மூத்தாள், சீர்கேடி, சிறப்பிலாதாள், ஏகவேணி, காகத்துவசமுற்றாள், கேட்டை, கெடலணங்கு, கழுதைவாகனி, கலதி, தெளவை, முகடி

இந்திரன் மனைவி பெயர்

இந்திராணி, புலோமசை, சசி, அயிராணி

இந்திரன்மைந்தன் பெயர்

சயந்தன்

அமரர்மாதின் பெயர்

அரமகள், அரம்பை

தெய்வமெல்லியர் பொதுப்பெயர்

சூர், அணங்கு

காளியின் பெயர்

சூரி, மாலினி, எண்டோளி, சூலி, சண்டிகை, தேவி, வீரி, மாதரி, கங்காளி, வேதாளி, மாதங்கி, தாரகற்செற்றதையல், பைரவி, சிலை, சாமுண்டி, ஆரணி, வல்லணங்கு, ஐயை, யாமளை, முக்கண்ணி

அலகைக்கொடியுயர்த்தாள், மதுபதி, யாளியூர்தி, மாயை, யோகினி

இடாகினியின் பெயர்

வலவை, சூர்மகள், மாயவள்

காளியேவல்செய்மகளிர் பெயர்

சன்மினி, வஞ்சப்பெண்

துர்கையின் பெயர்

அமரி, எண்டோளி, வெற்றி, அந்தரி, அம்பணத்தி, சமரி, பாலைக்கிழத்தி, சயமகள், வீரச்செல்வி, குமரி, மகிடற்செற்றாள், கொற்றவை, சக்கிரபாணி, விமலை, கலையானத்தி, விசையை, நாரணி, விந்தை

நீலி, காத்தியாயனி, மேதிச்சென்னிமிதித்தமெல்லியல், கெளரி, ஐயை, மாலினுக்கிளையநங்கை, பகவதி, வாள்கைக்கொண்டாள், சூலி, சண்டிகை, கன்னி, சுந்தரி

தேவர் பெயர்

அமரர், பண்ணவர், புத்தேளிர், கடவுளர், அண்டர், உம்மர், இமையவர், விபுதர், வானோர், இலேகர், புலவர், விண்ணோர், அமுதர், ஆதித்தர், மேலோர், ஐயர், சுரர், தீர்த்தர், உயர்நிலத்தவர்

தெய்வத்தின் பெயர்

அணங்கு, புத்தேள், சூர், கடவுள், தே, தெய்வதம்

அசுரர் பெயர்

தானவர், அவுணர், தைத்தியர், திதியின்மைந்தர், நிசாசரர்

இராக்கதர் பெயர்

நிருதர், பிசிதவூணர், நிசாசரர், அரக்கர், சாவகடங்கடர்

விஞ்சையர் பெயர்

வித்தியாதரர், கேசரர்

கந்தருவர் பெயர்

யாழ்வல்லோர், காந்தருவர், கின்னரர்

பூதத்தின் பெயர்

குறள், கிருத்திமம், கூளி, பாரிடம், சாதகம்

பேயின் பெயர்

பிரேதம், வேதாளம், வெறி, மயல், பிசாசம், பாசம், வியந்தரம், மண்ணை, சோகு, கழுது, கூளி, அலகை, கடி, சாவு

ஆகாயத்தின் பெயர்

அண்டம், வான், உலகு, மங்குல், அந்தரம், அம்பரம், கோ, குண்டலம், சுகனம், காயம், குடிலம், புட்கரம், அநந்தம், வெளி, மீ, மாசம், ஆசினி, கபம், கம், விண்டலம், விசும்பு, வேணி, வியோமம்.

காற்றின் பெயர்

வாதம், கால், வளி, மருத்து, வாடை, பவனம், வாயு, கூதிர், மாருதம், மால், கோதை, கொண்டல், உலவை, கோடை, ஊதை, வங்கூழ், ஒலி, சதாகதி, உயிர்ப்பு, அரி, கந்தவாகன், பிரபஞ்சனன், சலனன்

மேல் காற்றின் பெயர்

கோடை

கீழ் காற்றின் பெயர்

கொண்டல்

வாடையின் பெயர்

வடகாற்று, வடந்தை

பனிக்காற்றின் பெயர்

கூதிர், ஊதை

சுழல்காற்றின் பெயர்

சாரிகை, சூறை

தென்றலின் பெயர்

தென்கால், சிறுகால், தென்றி, மலயக்கரல், வசந்தன்

நெருப்பின் பெயர்

அரி, வசு, தகனன், அங்கி, அனல், அயவாகனன், தீ, எரி, சுசி, சிகி, ஆரல், காற்றின்சகாயன், கருநெறி, கனலி, அங்காரகன், சித்திரபானு, தழல், உதாசனன், தனஞ்சயன், எபநா, வன்னி, பாவகன், தேயு, அழல், சுடர், ஞெகிழி

ஊழித்தீயின் பெயர்

வடவை, தீத்திரள், மடங்கல், வடவாமுகம், கடையனல்

கனலொழுங்கின் பெயர்

சுவாலை

விண்வீர்கொள்ளியின் பெயர்

உற்கை

நறும்புகையின் பெயர்

வெடி, நறை, குய்

காட்டழலின் பெயர்

தாவம்

தீக்கடைகோலின் பெயர்

ஞெலிகோல்

விளக்கின் பெயர்

தீவிகை, தீபம், சுடர், ஒளி

புகையின் பெயர்

ஆவி, தூபம், தூமம், அரி

தீப்பொறியின் பெயர்

புலிங்கம்

தீத்தெய்வத்தின் பெயர்

பாவகன்

தீத்தெய்வத்தின் பாரியின் பெயர்

சுவாகாதேவி

நீரின் பெயர்

வாரி, ஆலம், கீலாலம், மழையலர், கமலம், காண்டம், நீரம், புட்கரம், சிந்து, புனல், சலிலம், பாணி, கார், அறல், புவனம், நாரம், கனவிரதம், கவந்தம், மாரி, அம்பு, உதம், அப்பு, வருணம், சீவனம், வனம், வார், பயம், மழை, உதகம், தோயம், பயசு, சம்பரம், பானீயம், வயம், சீவனீயம், தீர்த்தம், கீரம், சீதம், அயம், அளகம், ஆம், அம், அமுதம், கம், சலம்

வருணன் பெயர்

புனல் வேந்தன்

சூரியன் பெயர்

பரிதி, பாற்கரன், ஆதித்தன், பனிப்பகை, சுடர், பதங்கன், இருள்வலி, சவிதா, சூரன், எல், மார்த்தாண்டன், என்றூழ், அருணன், ஆதவன், மித்திரன், ஆயிரஞ்சோதியுள்ளோன், தரணி, செங்கதிரோன், சண்டன், தபனன், ஒளி, சான்றோன், அனல், அரி, பானு, அலரி, அண்டயோனி, கனலி, விகர்த்தனன், கதிரவன், பகலோன், வெய்யோன், தினகரன், பகல், சோதி, திவாகரன், அரியமா, இனன், உதயன், ஞாயிறு, எல்லை, கிரணமவுலி, ஏழ்பரியோன், வேந்தன், விரிச்சிகன், விரோசனன், இரவி, விணமனி, அருக்கன்

பரிதியின் வட்டத்தின் பெயர்

விசயம்

பரிதியின் கிரணத்தின் பெயர்

கரம், தீவிரம்

சந்திரன் பெயர்

நிலவு, சோமன், களங்கன், நிசாபதி, பிளை, கலையினன், உடுவின்வேந்தன், கலரநிதி, குபேரன், அலவன், சசி, திங்கள், அம்புலி, நிசாகரன், இமகிரணன், தண்ணவன், குரங்கி, மதி, இராக்கதிர், இந்து, தானவன், அல்லோன், விது, குமுதநண்பன், சுதாகரன், வேந்தன், ஆலோன், முயலின்கூடு, பசுங்கதிர்த்தே

செவ்வாயின் பெயர்

செந்தீவண்ணன், அங்காரகன், சேய், குருதி, வக்கிரன், பெளமன், குசன், நிலமகன், அரத்தன், அழலோன், மங்கலன், ஆரல், உதிரன்

புதன் பெயர்

சிந்தைகூரியன், கணக்கன், தேர்ப்பாகன், அருணன், சாமன், தூதுவன், மால், மதிமகன், அறிஞன், பாகன், புலவன், அனுவழி, மேதை, பச்சை, புந்தி, பண்டிதன்

வியாழன் பெயர்

தெய்வமந்திரி, சிசண்டிசன், அமைச்சன், சீவன், வேதன், ஆண்டளப்பான், ஆசரன், வேந்தன், பொன்

வெள்ளியின் பெயர்

அசுரமந்திரி, உசனன், பார்க்கவன், சுங்கன், சுக்கிரன், பளிங்கு, புகர், கவி, மழைக்கோள்

சனியின் பெயர்

கதிர்மகன், மந்தன், காரி, கரியவன், செளரி, மேற்கோள், முதுமகன், பங்கு, நீலன், முடவன், நோய்முகன்

இராகுவின் பெயர்

தமம், கறுப்பு

கேதுவின் பெயர்

செம்மை, சிகி, கதிர்ப்பகை

மேடத்தின் பெயர்

மை, வருடை, ஆடு, கொறி, மறி

இடபத்தின் பெயர்

குண்டை, சே, மூரி, புல்லம், கோ, விடை

மிதுனத்தின் பெயர்

தண்டு, யாழ், விழவு, இரட்டை, சவைமகள்

காக்கடகத்தின் பெயர்

நண்டு, ஞெண்டு, அலவன், சேக்கை, நள்ளி

சிங்கத்தின் பெயர்

அரி, யாளி, மா, கொடும்புலி

கன்னியின் பெயர்

மடந்தையர் பேரெல்லாம் மொழிந்திடும்

துலாத்தின் பெயர்

துலை, நிறை, நிறுப்பான், சீர், கோல், தூக்கு, வாணிகன்

விருச்சிகத்தின் பெயர்

தெறுக்கால், தேள்

தனுவின் பெயர்

கொடுமரம், துரோணம், சாபம், சிலை

மகரத்தின் பெயர்

மான், கலை, சுறா

கும்பத்தின் பெயர்

குடம், கரீரம், சாடி, குடங்கர்

மீனத்தின் பெயர்

மீன், மயிலை, மற்சம், சலசரம்

அச்சுவினியின் பெயர்

பரி, மருத்துவநாள், வாசி, ஐப்பசி, யாழ், ஏறு, இரலை, முதனாள், சென்னி

பரணியின் பெயர்

கிழவன், சோறு, பகலவன், தராசு, தரழி, தருமனாள், அடுப்பு, பூதம், தாசி, முக்கூட்டு

கார்த்திகையின் பெயர்

எரிநாள், ஆரல், இறால், அறுவாய், அளக்கர், நாவிதன், அங்கி, அளகு

உரோகிணியின் பெயர்

பிரமனாள், சகடு, பண்டி, சதி, வையம், உருள், விமானம், தேர், ஊற்றால், உரோணி

மிருகசீரிடத்தின் பெயர்

திங்கணாள், மதி, பேராளன், மான்றலை, மாழ்கு, மார்கழி, மும்மீன், நரிப்புறம், பாலை

திருவாதிரையின் பெயர்

செங்கை, மூதிரை, யாழ், ஈசன்றினம்

புனர்பூசத்தின் பெயர்

அதிதிநாள், கழை, புனர்தம், கரும்பு, புனிதம், பிண்டி, ஆவணம்

பூசத்தின் பெயர்

குருவினாள், கொடிறு, வண்டு, காற்குளம்

ஆயிலியத்தின் பெயர்

அரவினாள், கெளவை, பாம்பு, ஆயில்

மகத்தின் பெயர்

கொடுநுகம், வேள்வி, வாய்க்கால், வேட்டுவன், மாசி, முதலில்வருஞ்சனி

பூதத்தின் பெயர்

இடையெழுஞ்சனி, தூர்க்கை, எலி, பகவதிநாள், நாவிதன், கணை

உத்தரத்தின் பெயர்

பங்குனி, கடையெழுஞ்சனி, செங்கதிர்நாள்

அத்தத்தின் பெயர்

காமரம், அங்கிநாள், கெளத்துவம், கைம்மீன், களிறு, நவ்வி, ஐவிரல்

சித்திரையின் பெயர்

நெய், பயறு, மீன், அறுவை, ஆடை, தூசு, நடுநாள், தச்சன், துவட்டாநாள்

சோதியின் பெயர்

விளக்கு, மரக்கால், வீழ்க்கை, வெறுநுகம், காற்றினாள், காற்று, தீபம்

விசாகத்தின் பெயர்

முற்றில், வைகாசி, காற்றுநாள், முறம், சுளகு, சேட்டை

அனுடத்தின் பெயர்

புல், தாளி, பெண்ணை, தேன், போந்தை, மித்திரநாள்

கேட்டையின் பெயர்

சேட்டை, இந்திரனாள், வேதி, தழல், எரி, வல்லாரை

மூலத்தின் பெயர்

தேட்கடை, குருகு, கொக்கு, சிலை, அன்றில், ஆனி, அசுரநாள்

பூராடத்தின் பெயர்

உடைகுளம், முற்குளம், நீர்நாள்

உத்தராடத்தின் பெயர்

கடைக்குளம், ஆனி, விச்சுவநாள், ஆடி

திருவோணத்தின் பெயர்

மாயோனாள், உலக்கை, முக்கோல், வணம், சோணை

அவிட்டத்தின் பெயர்

கரகப்புள், வசுக்கணாள், பறவை, புள், ஆவணி

சதயத்தின் பெயர்

செக்கு, சுண்டன், போர், குன்று, வருணனாள்

பூரட்டாதியின் பெயர்

முற்றொழுங்கால், நாழி, புரட்டை

உத்தரட்டாதியின் பெயர்

முரசு, பிற்கொழுங்கால், மன்னன்

இரேவதியின் பெயர்

இரவிநாள், கலம், தோணி, தொழு, நாவாய், கடைநாள், சூலம், பெருநாள்

அருந்ததியின் பெயர்

வடமீன், சரலி

விண்மீனின் பெயர்

உடு, தாரகை, பம், உற்கை, சுக்கை

நாழிகையின் பெயர்

கடிகை, கன்னல், இருக்கை

காலநுட்பத்தின் பெயர்

துடி, கலை, விகலை

காலத்தின் பெயர்

வேலை, அமையம், செவ்வி, எல்லை, பொழுது, பாணி, காலை, கொன், பதம், போழ்து

நெடும்போழ்தின் பெயர்

நீட்டித்தல், பாணித்தல், நெடித்தல்

காலவிரைவின் பெயர்

ஒல்லை, இறை, சிறுவரை, இலேசம், வல்லை, மாத்திரை

மத்தியானத்தின் பெயர்

நண்பகல், உச்சி, நடுப்பகல்

இராசியின் பெயர்

இல், பவனம், ஓரை

இராவின் பெயர்

அல், விபாவரி, கங்குல், அல்கல், யாமினி, நத்தம், எல்லி, யாமம், மாலை, இரசனி, நிசி

பகலின் பெயர்

எல், திவா

நாளின் பெயர்

எல்லை, திவசம், வைகல், அல்கல், தினம், எல்லை, ஆனியம், பகல்

இருளின் பெயர்

சருவரி, அந்தகாரம், கச்சனம், தமம், துவாந்தம், திமிரம், துணங்கறல்

முன்னைநாளின் பெயர்

நெருநல், நென்னல்

பின்னைநாளின் பெயர்

பின்றை, பிந்தை

வைகறையின் பெயர்

புலரி, விடியல்

நிலவின் பெயர்

சந்திரிகை

வெய்யிலின் பெயர்

ஆதவம், என்றூழ்

மாலையின் பெயர்

சாயம், சந்தி

சாமத்தின் பெயர்

யாமம்

பருவத்தின் பெயர்

ஆனியம், இருது

ஒருகலையின் பெயர்

திதி, பக்கம்

மாதத்தின் பெயர்

மதி, திங்கள்

மதிதெரிகலையிராவின் பெயர்

சினீவாலி

மதிமறைகலையிராவின் பெயர்

குகு

பூரணையின் பெயர்

உலா, பல்லம்

அமாவாசையின் பெயர்

இந்துவோடிரவிகூட்டம், அமை

முதற்பக்கந்தொடங்கி மூன்றுவட்டமாக வருகிற ஐந்து பக்கங்களின் பெயர்

நத்தை, பத்திரை, சயை, இரித்தை, பூரணை

ஆவணி முதலிரண்டு மாதமாகிய அறுவகைப் பருவத்தின் பெயர்

கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்

வருடத்தின் பெயர்

வற்சரம், ஆண்டு, சமை, ஆயனம்

ஆண்டிற்பாதியின் பெயர்

அயனம்

ஊழிக்காலத்தின் பெயர்

உகமுடிவு, மடங்கல்

வாழ்நாளின் பெயர்

ஆயுள்

அயன்வாழ்நாளின் பெயர்

கற்பம்

மழையின் பெயர்

துளி, திவலை, தூவல், சீகரம், தூறல், மாரி, வருடம், உறை, ஆலி, வானம்

பெருமழையின் பெயர்

ஆசாரம்

விடாமழையின் பெயர்

பனித்தல், சோனை

துளியின் பெயர்

திவலை, தூவல், சிதர், சீகரம், ஆலி, தளி, உறை

ஆலங்கட்டியின் பெயர்

ஆலி, கரகம், கனோபலம்

மேலின் பெயர்

உம்பர், மேக்கு

கீழின் பெயர்

கிழக்கு

மேகத்தின் பெயர்

மங்குல், சீதம், பயோதரம், தாராதாரம், குயின், மழை, எழிலி, மஞ்சு, கொண்டல், சீமூதம், கொண்மூ, முகில், விண், விசும்பு, மால், சலதரம், செல், புயல், கனம், கந்தரம், கார், மை, மாரி

இடியின் பெயர்

வெடி, ஒலி, அசனி, செல், விண்ணேறு, மடங்கல், உரும், அனலேறு

மின்னின் பெயர்

வித்துத்து, தடித்து, சம்பை, சபலை, சஞ்சலை, மின்னல், கனருசி

பனியின் பெயர்

இமம், துகினம்

பரிவேடத்தின் பெயர்

ஊர்கோள், வட்டம்

வானவில்லின் பெயர்

இந்திரதனு

தேவப் பெயர்த்தொகுதி நிறைவுற்றது


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,