சூடாமணி நிகண்டு
மரப்பெயர்த் தொகுதி
|
ஐந்தருவாவன |
சந்தானம், அரிசந்தனம், மந்தாரம், பாரிசாதம், கற்பகம் |
|
சந்தனமரத்தின் பெயர் |
சந்து, ஆரம், சாந்து, சாந்தம், சந்திரதிலகம், படீரம், மலயசம் |
|
கற்பகதருவிற்படர் கொடியின் பெயர் |
காமவல்லி |
|
அகிலின் பெயர் |
அகரு, காகதுண்டம், பூழில் |
|
பாதிரிமரத்தின் பெயர் |
புன்காலி, பாடலம் |
|
மகிழமரத்தின் பெயர் |
வகுளம், இலஞ்சி, கேசரம் |
|
கோங்குமரத்தின் பெயர் |
துருமோற்பலம், கன்னிகாரம் |
|
சண்பகமரத்தின் பெயர் |
சம்பகம் |
|
புன்னை மரத்தின் பெயர் |
புன்னாகம், நாகம் |
|
சுரபுன்னையின் பெயர் |
வழை |
|
நாரத்தையின் பெயர் |
நரத்தம், நாரம், நாரங்கம் |
|
குருக்கத்தியின் பெயர் |
குருகு, நாகரி, வாசந்தி, மாதவி |
|
சிறுசண்பகத்தின் பெயர் |
சாதி, மாலதி |
|
பித்திகையின் பெயர் |
கருமுகை, |
|
மஞ்சாடியின் பெயர் |
திலகம் |
|
மகரவாழையின் பெயர் |
மருகு |
|
வனமல்லிகையின் பெயர் |
மெளவல் |
|
மல்லிகையின் பெயர் |
பூருண்டி, மாலதி, அனங்கம் |
|
காயாவின் பெயர் |
அல்லி, புன்காலி, காசை, அஞ்சனி, பூவை |
|
வெட்சியின் பெயர் |
குல்லை, செச்சை, சிந்தூரம் |
|
துளசியின் பெயர் |
குல்லை, துளவு, துழாய், வனம் |
|
செருந்திமரத்தின் பெயர் |
செங்கோடு, பஞ்சரம் |
|
அழிஞ்சிலின் பெயர் |
அங்கோலம், சே, சேமரம் |
|
குங்குமமரத்தின் பெயர் |
துருக்கம், மரவம் |
|
அனிச்சமரத்தின் பெயர் |
அருப்பலம், நறவம், சுள்ளி. |
|
அலரியின் பெயர் |
கரவீரம், கவீரம், கணவீரம் |
|
மருக்கொருந்தின் பெயர் |
தமனகம் |
|
இருவேலியின் பெயர் |
மூலகந்தம், வேரி, பீதகம் |
|
தாழையின் பெயர் |
முண்டகம், முடங்கல், கைதை, முசலி, மடி, கண்டல், கேதகை, |
|
இருவாட்சியின் பெயர் |
மயிலை, அனங்கம் |
|
பட்டிசையின் பெயர் |
பறிவை |
|
நந்தியாவர்த்தத்தின் பெயர் |
வலம்புரி |
|
செவ்வரத்தத்தின் பெயர் |
மந்தாரம் |
|
பனையின் பெயர் |
தாலம், பெண்ணை, புல், தாளி, புற்பத |
|
கூந்தற்பூகத்தின் பெயர் |
தாலம் |
|
கமுகின் பெயர் |
கந்தி, பூகம், பூக்கம் |
|
பாக்கின் பெயர் |
துவர்க்காய், பாகு, கோலம் |
|
பலாமரத்தின் பெயர் |
பனசம், வருக்கை, பாகல், பலவு |
|
ஈரப்பலாவின் பெயர் |
ஆசின |
|
மாமரத்தின் பெயர் |
மாந்தி, சூதம், ஆமிரம், கொக்கு, மாழை |
|
தேமாவின் பெயர் |
சேதாரம் |
|
தெங்கின் பெயர் |
தாழை, தென், நாளிகேரம், இலாங்கலி |
|
பன்னாடையின் பெயர் |
நெய்யரி, நாரி |
|
வாழையின் பெயர் |
கதலி, அரம்பை |
|
கரும்பின் பெயர் |
வேழம், கன்னல், இக்கு, கழை |
|
மூங்கிலின் பெயர் |
காம்பு, பாதிரி, முடங்கல், கழை, பணை, விண்டு, நேமி, தூம்பு, வேய், தட்டை, முந்தூழ்,
துளை, கிளை, முளை, வேணு, ஆம்பல், கீசகம், வேல், வேரல், அரி, அமை, திகிரி, வேழம், வரை, வெதிர் |
|
ஆலமரத்தின் பெயர் |
வடம், நியக்குரோதம், பூதம், கான்மரம், தொன்மரம், கோளி, பழுமரம் |
|
வெட்பாலையின் பெயர் |
குடசம், கிரிமல்லிகை |
|
குடைவேலின் பெயர் |
உடை |
|
புன்கமரத்தின் பெயர் |
நரஞ்சகம் |
|
அசோகமரத்தின் பெயர் |
செயலை, பிண்டி, காகோளி. |
|
அரசமரத்தின் பெயர் |
சுவலை, குஞ்சராசனம், அச்சுவத்தம், திருமரம், பணை, போதி, கணவம், பிப்பலம் |
|
புளியமரத்தின் பெயர் |
சிந்தகம், ஆமிலம், சிந்தூரம், எகின், திந்திடீகம் |
|
தேக்கின் பெயர் |
சாகம், சாதி |
|
கொன்றையின் பெயர் |
இதழி, தாமம், மதலை, கடுக்கை |
|
முண்முருக்கின் பெயர் |
கிஞ்சுகம், கவிர் |
|
நாவலின் பெயர் |
சம்பு, நேரேடு |
|
குழிநாவலின் பெயர் |
சாதேவம் |
|
வேம்பின் பெயர் |
நிம்பம், பிசுமர்த்தம் |
|
எலுமிச்சையின் பெயர் |
சம்பீரம், முருகு, சதாபலம், இலிருசம், அருணம், சம்பளம் |
|
அத்திமரத்தின் பெயர் |
அதவு, உதும்பரம், கோளி, அதம் |
|
புளிமாவின் பெயர் |
மாழை, சிஞ்சம், எகின் |
|
இலந்தையின் பெயர் |
வதரி, கோற்கொடி, கோலி, குவலி |
|
இலந்தைக்கனியின் பெயர் |
கோலம், கோண்டை |
|
மாதுளையின் பெயர் |
மாதுளம், மாதுளுங்கம், கழுமுள் |
|
தாதுமாதுளையின் பெயர் |
தாடிமம் |
|
பிரம்பின் பெயர் |
சாதி, வேத்திரம், குரல் |
|
ஆத்தியின் பெயர் |
தாதகி, ஆர், சல்லகி |
|
தேற்றுமரத்தின் பெயர் |
சில்லம், இல்லம் |
|
வாகைமரத்தின் பெயர் |
சிரீடம், பாண்டில் |
|
வில்வமரத்தின் பெயர் |
வில்வம், மாலூரம், கூவிளம் |
|
பாராய்மரத்தின் பெயர் |
பசுநா, விட்டில், புக்கு |
|
கிலுகிலுப்பையின் பெயர் |
பகன்றை |
|
ஓடையின் பெயர் |
உலவை |
|
வாடாக்குறிஞ்சியின் பெயர் |
குரவகம் |
|
குறிஞ்சியின் பெயர் |
குரண்டகம் |
|
பேரீந்தின் பெயர் |
கர்ச்சூரம் |
|
கோட்டத்தின் பெயர் |
குரவம் |
|
மழைவண்ணக்குறிஞ்சியின் பெயர் |
பாணம் |
|
நாயுருவியின் பெயர் |
கரமஞ்சரி |
|
முல்லையின் பெயர் |
தளவு, மாகதி, மெளவல், யூதிகை |
|
கனாவின் பெயர் |
களவு |
|
கருங்காலியின் பெயர் |
கதிரம் |
|
விளாவின் பெயர் |
விளவு, கபித்தம், வெள்ளில் |
|
வெண்கடுகின் பெயர் |
கடிப்பகை, ஐயவி, சித்தார்த்தம் |
|
மருதமரத்தின் பெயர் |
பூதவம், அருச்சுனம் |
|
வேங்கைமரத்தின் பெயர் |
கணி, பீதசாலம், திமிசு |
|
முந்திரிகையின் பெயர் |
மதுரசம், கோத்தனி |
|
அதிமதுரத்தின் பெயர் |
யட்டி, மதுகம், அதிங்கம் |
|
செங்காந்தளின் பெயர் |
காந்தள், பற்றை, இலாங்கலி, தோன்றி |
|
வெண்காந்தளின் பெயர் |
காந்துகம், கோடல், கோடை |
|
புனமுருக்கின் பெயர் |
பலாசு |
|
வன்னியின் பெயர் |
சமி |
|
நுணாவின் பெயர் |
தணக்கு |
|
குருந்தமரத்தின் பெயர் |
குந்தம் |
|
குமிழின் பெயர் |
கூம்பல் |
|
குன்றியின் பெயர் |
குஞ்சம் |
|
கடம்பின் பெயர் |
இந்துளம், மரா, கதம்பம், நீபம் |
|
வெண்ணொச்சியின் பெயர் |
சிந்துவாரம், நிர்க்குண்டி |
|
சத்திக்கொடியின் பெயர் |
தாடிமஞ்சம் |
|
கடுமரத்தின் பெயர் |
அரிதகி, பத்தியம் |
|
நெல்லியின் பெயர் |
ஆமலகம் |
|
தான்றியின் பெயர் |
கலித்துருமம் |
|
திப்பலியின் பெயர் |
மாகதி, காமன், கலினி |
|
கொத்துமலியின் பெயர் |
உருளரிசி. |
|
கருவிளையின் பெயர் |
கன்னி, காக்கணம், கிகிணி |
|
துரிஞ்சிலின் பெயர் |
முன்னம், சீக்கிரி |
|
ஆடாதோடையின் பெயர் |
வாசை |
|
பருத்தியின் பெயர் |
பன்னல், கார்ப்பாசம் |
|
இத்தியின் பெயர் |
சுலி, இரத்தி, இரத்திரி, இறலி |
|
ஆமணக்கின் பெயர் |
சித்திரகம், ஏரண்டம் |
|
இருப்பையின் பெயர் |
மதுகம், குலிகம் |
|
எட்டியின் பெயர் |
கோடரம், காளம், காஞ்சிரை, முட்டி |
|
செங்கருங்காலியின் பெயர் |
சிறுமாரோடம் |
|
ஆச்சாமரத்தின் பெயர் |
சாலம், சுள்ளி, மராமரம், ஆ |
|
இலவமரத்தின் பெயர் |
பொங்கர், சான்மலி, பூரணி |
|
வழுதலையின் பெயர் |
வங்கம், வழுதுணை |
|
கழற்கொடியின் பெயர் |
கர்ச்சூரம் |
|
கழற்காயின் பெயர் |
கழங்கு, முழல் |
|
கற்றாழையின் பெயர் |
குமரி, கன்னி |
|
புலிதொடக்கியின் பெயர் |
இண்டு |
|
ஈகையின் பெயர் |
ஈங்கை |
|
சிறுபூளையின் பெயர் |
உழிஞை |
|
ஊமத்தையின் பெயர் |
உன்மத்தம் |
|
அகத்தியின் பெயர் |
அச்சம், முனி, கரீரம் |
|
எருக்கின் பெயர் |
அருக்கம் |
|
பச்சிலைமரத்தின் பெயர் |
தமாலம், பசும்பிடி |
|
சுண்டியின் பெயர் |
சுச்சு |
|
வறட்சுண்டியின் பெயர் |
சமங்கை |
|
சதுரக்கள்ளியின் பெயர் |
வச்சிராங்கம், கண்டீர்வம், வச்சிரம் |
|
மலைப்பச்சையின் பெயர் |
குளவி |
|
ஞாழலின் பெயர் |
பலினி |
|
சிறுகீரையின் பெயர் |
சில்லி, மேகநாதம், சாகினி |
|
சேம்பின் பெயர் |
சகுடம் |
|
வள்ளையின் பெயர் |
நாளிகம் |
|
கொத்தான் பெயர் |
நந்தை
|
|
நறுவிலியின் பெயர் |
அலி |
|
சாறடையின் பெயர் |
திரிபுரி |
|
கூதாளியின் பெயர் |
கூதாளம் |
|
வெள்ளரியின் பெயர் |
உருவாரம்
|
|
கக்கரியின் பெயர் |
வாலுங்கி |
|
காஞ்சொறியின் பெயர் |
கண்டூதி |
|
தாளியின் பெயர் |
மஞ்சிகம் |
|
சிவேதையின் பெயர் |
பகன்றை |
|
ஏலத்தின் பெயர் |
அடி, ஆஞ்சி |
|
இசங்கின் பெயர் |
முத்தாபலம், குண்டலி |
|
பாகலின் பெயர் |
கூலம், காரவல்லி |
|
பாலைமரத்தின் பெயர் |
சீவந்தி, சீவனி |
|
கொவ்வையின் பெயர் |
விம்பம், தொண்டை |
|
பசிரியின் பெயர் |
பாவிரி |
|
தும்பையின் பெயர் |
துரோணம் |
|
சுரையின் பெயர் |
அலாபு |
|
கொடிக்கொத்தான் பெயர் |
நூழில் |
|
முருங்கையின் பெயர் |
சிக்குரு |
|
இலைக்கறியின் பெயர் |
அடகு |
|
பீர்க்கின் பெயர் |
பீரம் |
|
பெரும்பீர்க்கின் பெயர் |
படலிகை |
|
பாற்சொற்றியின் பெயர் |
பாயசம் |
|
சீந்திக் கொடியின் பெயர் |
அமுதவல்லி, சீவந்தி |
|
கொடியின் பெயர் |
இலதை, வள்ளி, வல்லி |
|
நாணலின் பெயர் |
சரம், காசை, காசம் |
|
வெறிறிலைக் கொடியின் பெயர் |
தாம்பூலவல்லி, தாம்பூலி, நாகவல்லி, திரையல், மெல்லிலை |
|
மிளகின் பெயர் |
கறி, மரீசம், காயம், கவினை, கோளகம், திரங்கல், மிரியல் |
|
நெல்லின் பெயர் |
வரி, சொல், விரீகி, சாலி, யவம் |
|
செந்நெல்லின் பெயர் |
நன்னெல், செஞ்சாலி |
|
பயிரின் பெயர் |
பைங்கூழ், பசும்புல் |
|
கதிரின் பெயர் |
குரல், ஏனல் |
|
இளஞ்சூலின் பெயர் |
பீட்டை |
|
இளங்கதிரின் பெயர் |
பீள் |
|
பதரின் பெயர் |
பதடி |
|
நெற்போரின் பெயர் |
சும்மை |
|
தூற்றாதநெற்பொலியின் பெயர் |
பொங்கழி |
|
கோதுமையின் பெயர் |
கோதி |
|
அரிசியின் பெயர் |
தண்டுலம் |
|
வைக்கோலின் பெயர் |
வழுது, வை, பலாலம் |
|
மலைநெல்லின் பெயர் |
ஐவனம் |
|
வேயரிசியின் பெயர் |
தோரை |
|
குளநெல்லியின் பெயர் |
நீவாரம் |
|
கம்பின் பெயர் |
செந்தினை, கவலை |
|
தினையின் பெயர் |
ஏனல் |
|
பைந்தினையின் பெயர் |
ஏனல் |
|
கருந்தினையின் பெயர் |
இறடி, கங்கு |
|
தினைத்தாளின் பெயர் |
அருவி, இருவி |
|
துவரையின் பெயர் |
ஆடகம் |
|
கடலையின் பெயர் |
மஞ்சுரம் |
|
அவரையின் பெயர் |
சிக்கடி, சிம்பை |
|
உழுந்தின் பெயர் |
மாடம் |
|
பயற்றின் பெயர் |
முற்கம் |
|
கொள்ளின் பெயர் |
காணம், குலத்தம் |
|
துவரைகடலை முதலியவற்றின் பெயர் |
முதிரை, கூலம் |
|
காராமணியின் பெயர் |
இதை |
|
சோளத்தின் பெயர் |
சொன்னல், இறுங்கு |
|
எள்ளின் பெயர் |
எண், திலம், நூ |
|
எள்ளிளங்காயின் பெயர் |
கவ்வை |
|
இளையெள்ளின் பெயர் |
குமிகை |
|
வரகின் பெயர் |
கோத்திரவம் |
|
தருப்பையின் பெயர் |
குசை, குமுதம், கூர்ச்சம், குசம் |
|
அறுகின் பெயர் |
பதம், தூர்வை |
|
இளம்புல்லின் பெயர் |
சடபம் |
|
மஞ்சளின் பெயர் |
நிசி, அரிசனம், பீதம், காஞ்சனி |
|
இஞ்சியின் பெயர் |
அல்லம், நறுமருப்பு |
|
கருணைக்கிழங்கின் பெயர் |
கந்தம், சூரணம் |
|
மரப்பொதுவின் பெயர் |
தரு, அகலியம், விருக்கம், தாவரம், விடபி, தாரு, துருமம், குசம், பூருகம், சாகி, பாதபம் |
|
கிழங்கின் பெயர் |
மூலம், சகுனம், கந்தம், மூலகம் |
|
முளையின் பெயர் |
கால், அங்குரம், |
|
வேரின் பெயர் |
தூர், சிலை |
|
மரக்கொம்பின் பெயர் |
கோல், இபம், விடபம், கொம்பர், கோடரம், பொங்கர், சாகை, சுவடு, தாரு, பணை, சினை, உலவை |
|
மரவயிரத்தின் பெயர் |
கலை, ஆசினி, சேகு, காழ்ப்பு, காழ் |
|
இலையின் பெயர் |
தலம், அடை, தகடு, பன்னம், சதனம், பத்திரம், பலாசம், தமாலம், |
|
தழையின் பெயர் |
உலவை |
|
மரக்கன்றின் பெயர் |
குழலி, பிள்ளை, போதகம், போத்து |
|
இளங்கொம்பின் பெயர் |
மெல்லியல் |
|
கப்பின் பெயர் |
கவர் |
|
தளிரின் பெயர் |
வல்லரி, கிசலயம், மஞ்சரி, முறி, அலங்கல், பல்லவம், குழை, |
|
குருத்தின் பெயர் |
முருந்து |
|
தளிர்த்தலின் பெயர் |
குழைத்தல், இலிர்த்தல் |
|
அரும்பின் பெயர் |
முகை, நனை, கலிகை, போகில், முகுளம், மொக்குள், மொட்டு, கோரகம், சாலகம் |
|
பூவின் பெயர் |
குசுமம், போது, தார், அலர், சுமனசம், மலர், தாமம், லீ, இணர், துணர் |
|
பூங்கொத்தின் பெயர் |
தொத்து, மஞ்சரி, துணர், இணர், குலை |
|
பூந்தாதின் பெயர் |
மகரம், கொங்கு, கேசரம், துணர் |
|
பூந்தேனின் பெயர் |
மகரந்தம் |
|
தாதிற்றூளின் பெயர் |
பராகம், பிரசம் |
|
மலர்தலின் பெயர் |
அலர்தல், அவிழ்தல், விள்ளல், நெகிழ்தல் |
|
விரிமலரின் பெயர் |
இகமலர், வெதிர், தொடர்ப்பூ |
|
பழம்பூவின் பெயர் |
சாம்பல், செம்மல், தேம்பல் |
|
பூவிதழின் பெயர் |
ஏடு, தோடு, தளம், மடல் |
|
அகவிதழின் பெயர் |
அல்லி |
|
புறவிதழின் பெயர் |
புல்லி |
|
காயின் பெயர் |
வடு, பிஞ்சு, தீவிளி |
|
பழத்தின் பெயர் |
கனி, பலம் |
|
விதையின் பெயர் |
பரல், காழ், பீசம், வித்து |
|
கொத்தின் பெயர் |
குலை, குச்சம், தாறு, சாறு, குடும்பு, படு |
|
பலமிலாமரத்தின் பெயர் |
அவகேசி |
|
காய்த்திருந்தமரத்தின் பெயர் |
பலினம் |
|
உலர்ந்தமரத்தின் பெயர் |
வானம் |
|
பூவாதுகாய்க்குமரத்தின் பெயர் |
கோளி, வனபதி |
|
விறகின் பெயர் |
இந்தனம், முருடு, கட்டை, கறல், சமிதை, காட்டம், ஞெகிழி, முளரி |
|
மரச்செறிவின் பெயர் |
கோடரம், பொதும்பர் |
|
மரப்பொந்தின் பெயர் |
பொள்ளல் |
|
முள்ளின் பெயர் |
கடு, கண்டகம் |
|
சோலையின் பெயர் |
துடவை, நந்தவனம், பூந்தோட்டம், அரி, உய்யானம், பொழில், உத்தியானம், கா, மரச்செறிவு, ஆராமம், தண்டலை, உபவனம் |
|
ஊர்சூழ்சோலையின் பெயர் |
வனம் |
|
காட்டின பெயர் |
அடலி, கான், புறவம், பொச்சை, ஆரணியம், காந்தாரம், கடம், வனம், முளரி, தில்லம், ககனம், கண்டகம், தாவம், விடர், சுரம், பழுவம், கானல், விபினம், கட்சி, கானம், கடறு, கானனம், அத்தம், களரி |
|
பெருந்தூற்றின் பெயர் |
குன்மம், பஞ்சி, விடபம் |
|
சிறுதூற்றின் பெயர் |
அறல், இறல், பதுக்கை |
|
குறுங்காட்டின் பெயர் |
இறும்பு |
|
பெருங்காட்டின் பெயர் |
வல்லை |
|
காவற்காட்டின் பெயர் |
அரண், இளை |
|
முதிர்காட்டின பெயர் |
முதையல் |
|
கரிகாட்டின் பெயர் |
பொதி, பொச்சை, |
|
வேலியின் பெயர் |
இளை |
|
ஆண்மரமென்பது |
அகக்காழ், |
|
பெண்மரமென்பது |
புறக்காழ் |
|
அலிமரமென்பது |
வெளிறு |
|
தாமரையின் பெயர் |
புண்டரீகம், அம்போருகம், குசேசயம், முண்டகம், அரவிந்தம், முளரி, பங்கயம், வாரீசம், இண்டை, அம்புயம், சரோசம், சதபத்திரி, நளினம், கஞ்சம், வனசம், சலசம், கமலம், கோகனதம், திருமாலுந்தி,
சரோருகம், பதுமம் |
|
தாமரைமலரின் பெயர் |
இறும்பு, இராசீவம் |
|
தாமரைக்கொட்டையின் பெயர் |
பொருட்டு, கன்னிகை |
|
தாமரைச்சுருளின் பெயர் |
விசி, வளையம் |
|
தாமரைக்காயின் பெயர் |
வராடகம் |
|
செங்கழுநீரின் பெயர் |
அரத்தவுற்பலம், செங்குவளை, கல்லாரம் |
|
கருங்குவளையின் பெயர் |
பானல், காவி, குவலயம் |
|
கருநெய்தலின் பெயர் |
நீலம், இந்தீவரம், உற்பலம் |
|
வெண்ணெய்தலின் பெயர் |
குமுதம் |
|
அரக்காம்பலின் பெயர் |
செங்குமுதம், செவ்வல்லி, சேதாம்பல் |
|
வெள்ளாம்பலின் பெயர் |
அல்லி, கைரவம் |
|
திரள்கோரையின் பெயர் |
சாய், பஞ்சாய்க்கோரை |
|
வாட்கோரையின் பெயர் |
கெருந்தி |
|
முள்ளியின் பெயர் |
கண்டல், முண்டகம் |
|
முள்ளுடைமூலமெல்லாவ்றறிற்கும் பெயர் |
முண்டகம் |
|
பாசியின் பெயர் |
நாரம், சைவலம், சடைச்சி |
|
நீர்க்குளிரியின் பெயர் |
கல்லாரம் |
|
மருந்தென்னும் பெயர் |
வல்லி, பல், பூடு, மரமுதலிய |
|
சல்லியகாணியென்பது |
வேல் தைத்த புண் மாற்று மருந்து |
|
சந்தான கரணியென்பது |
துணிபட்ட உறுப்பைப் பொருத்து மருந்து |
|
சமனியகரணியென்பது |
விரணந்தீர்க்குமருந்து |
|
மூர்ச்சை தீர்த்துக் குற்றுயிர் தருமருந்தின் பெயர் |
மிருதசஞ்சீவனி, அமுது |
|
மருந்தின் பொதுப் பெயர் /p> |
உறை, குளியம், யோகம், அதகம் |
|
மாலையின் பெயர் |
அலங்கல், பிணையல், ஆரம், சிகழிகை, அணி, சுருக்கை, இலம்பகம், தெரியல், சுக்கை,
கத்திகை, தாமம், படலை, கண்ணி, தொடை, தொங்கல், ஒலியல், கோதை, தார், மஞ்சரி, |
|
நுதலணியின் பெயர் |
சூட்டு, இலம்பகம் |
|
வாசிகையின் பெயர் |
சிகழிகை, படலை, |
|
வாகையாவது |
கல்வி, கேள்வி, குடி, கொடை, படைகட்குள் வாட்டமில்லவரை வென்று மெளலி சூட்டுவது. |
மரப்பெயர்த் தொகுதி நிறைவுற்றது
தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,
|