அன்புடையீர், வணக்கம்.

தமிழம் வலையின் ஒருபகுதியாக - தமிழ்ப் பேழை - என்ற இந்தப் பக்கம் இணைக்கப் பட்டுள்ளது.

நாம், தமிழர் என்று நெஞ்சு நிமிர்த்துகிற வகையிலான அரிய செய்திகள் இந்தப் பக்கத்தில் இடம் பெறும்.

தமிழ்ப் புலவர்கள் - தமிழுக்காக இயங்கிய புலவர்களின் தொகுப்பு இது. இவர்களது தொடர் உழைப்பால்தான் மறைந்து கிடந்த பல்வேறு வகையான படைப்புகளும், செய்திகளும் வெளிச்சம் பெற்றன. இவர்களின் படைப்பாக்கங்கள் ஆய்வுக் கட்டுரைகள், விளக்க உரைகள் என்பன தமிழுக்குப் புத்துணர்வு ஊட்டுவதாக அமைந்துள்ளன. இந்த வகையில் இயங்கிய அனைத்துப் புலவர்களையும் இந்தப் பகுதியில் தொகுக்க வேண்டும். விடுபட்ட புகைப்படங்களை அனுப்பி உதவவும்.

தமிழ்ப் பெயர்கள் - நம் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயரை வைப்பதன்வழி அவர்களுக்குள் தமிழியத்தை வளர்க்க இயலும். ஆண், பெண் குழந்தைகளுக்கான தெளிதமிழ்ப் பெயர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

தமிழர் நெஞ்சுயர்த்த - சங்கப் பாடல்களும், அரிய படைப்பாக்கங்களும் நூல்வடிவம் பெற்றுள்ளன. இருந்தாலும் அவை பலராலும் படிக்கப்பட வில்லை. எனவே, ஈர்ப்புடைய, ஆழமும் நுட்பமும் உடைய, இவ்வகையான பாடல்களை அறிமுகத்திற்காக இந்தப் பகுதியில் இணைக்க விரும்புகிறேன். நீங்களும் அனுப்பி வைக்கலாம்.

இசைப் பாடல்கள் - பாடலை இசைவடிவில் கேட்கும் பொழுது, பாடல் நினைவில் நிற்கிறது. திரும்பத் திரும்பக் கேட்கும் பொழுது பாடலின் இசையுடன் பாடலுக்கான கருத்தும் உள்நுழைந்து வழி நடத்துகிறது. எனவே இசை வடிவில் அமைந்த இலக்கியப் பாடல்களை இந்தப் பகுதியில் கேட்கலாம். பாடல்களைக் கேட்க நீங்கள் Real Player ஐ உங்கள் கணினியில் நிறுவியிருக்க வேண்டும்.

நூல் விமர்சனம் - எமக்கு வந்த நூல்களைப் நூல் பற்றிய சிறு குறிப்புடன் இங்கு அறிமுகப்படுத்தப் படும்.

புகைப்படங்கள் - புகைப்படங்கள் தான் சான்றாவணங்களாக அமைகின்றன. நூற்றாண்டுகளுக்கப் பிறகு இவை சாட்சிகளாக இருந்து வரலாறு காட்டும். எனவே, இவ்வகையான புகைப்படங்களைத் தொகுத்து இந்தப் பக்கத்தில் இணைக்க விரும்புகிறேன். அரிய வீடியோ காட்சிகளையும் இந்தப் பக்கத்தில் இணைக்க விரும்புகிறேன்.

ஓவியங்கள் - ஓவியங்கள் படைப்பாற்றல் மிக்கவைகள். கருத்தை ஏற்றிச் சொல்லவும், பார்ப்பவரைச் சிந்திக்க வைத்து, இயங்க வைக்கவும் ஓவியங்கள் உதவுகின்றன. அரிய கோட்டோவியங்களையும், வண்ண ஓவியங்களையும் இந்தப் பக்கத்தில் வலை ஏற்ற விரும்புகிறேன்.

குறும்படங்கள் - நண்பர்கள் உருவாக்கி தமிழம் வலையின் பார்வைக்கு வந்த குறும்படங்களை இத்துடன் இணைத்துள்ளேன். மக்களை வளர்த்தெடுக்கிற குறும்படங்களை உருவாக்கி தமிழம் வலைக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

அரியவை - அரியதாகவும், வியப்பூட்டுவதாகவும் அமைத்துள்ள தமிழியச் செயற்பாடுகள் இங்கு இடம் பெறும்.

கணினிச் செயற்பாடுகள் - அறிவியல் கண்டுபிடிப்புகளில் தவிர்க்க முடியாதது கணினித் தொழில் நுட்பம். புலம் பெயர்ந்து வாழும் நம் தமிழர்களின் தொடர்புக் கருவியாக இருப்பதும் கணினியே. எனவே பல்வேறு வகையான மென் பொருள்களை உருவாக்க வேண்டியது தமிழுக்கான உயிர்த்துடிப்பாக அமைந்துள்ளது. இந்த வகையில் உருவான அனைத்தையும் வரிசைப் படுத்துவதோடு, அதன் வரலாறு காட்டுவதும் முதன்மையானதாகும். இந்தப் பக்கத்தில் இவ்வகையான செயற்பாடுகளை இணைக்க விரும்புகிறேன்.

பாண்டியன் பக்கம் - தமிழ், தமிழர் தமிழ்நாடு என்ற கருத்தாக்கத்திற்கு ஊட்டமாக அமைகிற கருத்துருக்களை காணொளி வடிவில் உருவாக்கி சுற்றுக்கு விடுவதன் மூலம் கருத்தை விதைக்க இயலும் என்ற நண்பரின் படைப்பாக்கப் பதிவு இது.

தமிழம் வலையை முழுமையாகக் கண்டு கருத்தளிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

அன்புடன்
தமிழ்க்கனல், தமிழம் வலை,
அலைபேசி : 890 300 2071, மின்அஞ்சல் pollachinasan@gmail.com