கணினிச் செயற்பாடுகள்

கணினி உலகில் தமிழ் மொழி, புதிய புதிய செயற்பாடுகளோடு முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பூமிப்பந்தின் வெவ்வேறு பகுதிகளில் பரவி, வாழுகிற, நம் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக இச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ் எழுத்துருக்கள், தமிழ் மென்பொருள்கள், தமிழ் கற்பித்தலுக்கான குறுவட்டுகள், எனப் பல்வேறு வகையான கணினிச் செயற்பாடுகள் வியக்க வைக்கின்றன. தமிழ் மொழிக்கான இவை போன்ற கண்டுபிடிப்புகளை, உருவாக்கங்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

எனது 300 மணி நேர உழைப்பைப் பயன்படுத்தி இந்த "திரு" எழுத்துருக்களை உருவாக்கியிருக்கிறேன். தமிழ் இலக்கியத்தை, வரலாற்றை பதிவுசெய்ய விரும்புகிறவர்களுக்கு இதனை இலவசமாகவே அளிக்கிறேன்..." என்று அறிவித்தவர்...

குறள் 3.1 என்ற வெளியீட்டில் ஓசை - தமிழ் உரை ஒலி (Text to Speech) என்ற ஒரு வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்தேன். தமிழில் எழுதியதை அப்படியே வாசித்துக் காட்டும் இந்த அம்சம் பலரையும் கவர்ந்ததிருக்கிறது. மழலைத் தமிழ் பேசும் இவ்வம்சத்தை இன்னும் செம்மையாக்கிக் கொண்டு இருக்கின்றேன். குறள் தமிழ்ச் செயலியினை www.kuralSoft.com என்ற இணையத் தளம் மூலம் இலவசமாகவே பெற்றுக் கொள்ளலாம் என்று தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர்....

தமிழ் திறவூற்று மென்பொருள்களை இறுவட்டாக்கி, வெளியிட்டு வணிக நோக்கின்றிப் பரப்புபவர்கள்...

தமிழ் இலக்கியப் பதிவுகளைப் கணினிவழி, இணையத்தில் ஏற்றி உலகெலாம் அறியச் செய்பவர்கள்...

இப்படிப் புகழ்விரும்பாத் தொடர்செயற்பாட்டுக் கணினிச் சிந்தனையாளர்களை, கணினித் தமிழை வளர்த்தெடுப்பவர்களை, தமிழம். வலை பதிவு செய்ய விரும்புகிறது. இது கணினி வரலாற்றிற்கு அடித்தளமாக அமையட்டும்...

எழுத்துருக்கள்...
[ திரு-ஆதமி ] [ முரசு ] [ அழகி ] [ நளினம் ] [ குறள் ] [ NHM ] [ வரியுருமா ]

இறுவெட்டுகள்...
[ Softview ] [ Kalvi Tamil Book ] [ Kalvi Tamil teacher ] [ cyber Multimedia ] [ திருக்குறள் ] [ திருவாசகம் ] [ தமிழ் கற்போம் ] [ அறிவோடு விளையாடு ] [ இரா. செம்பியன் ] [ கலைப்பூக்கள் ] [ வா.செ.கு ] [ புதுமைப்பித்தன் ] [ TEF - KUWAIT ]

இலவசச் செயலிகள்...
[ தமிழ் திறவூற்று ] [ கம்பன் ] [ மென்பொருள் ] [ தேடித்தருகிற கூகிள் ] [ விக்கிபீடியா ]

கட்டுரைகள்...
[ தொல்காப்பியம் ] [ போட்காஸ்டிங் ] [ சிப்புகள் ] [ யுனிகோடில் தமிழ் ]தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,